மஹத் யாஷிகா அத்துமீறல்.! அவர்கள் செய்வது சரியா.! காதலி அதிர்ச்சி பதில்

0
748
Mahat

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நடிகர் மஹத் மற்றும் யாஷிகா ஆகிய இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் முத்தமிட்டு கொள்வது,கட்டிபிடித்துகொள்வது என்று பல்வேறு அத்து மீறல்கள் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

mahat

- Advertisement -

நடிகர் மஹத் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்கனவே நடிகை டாப்ஸியை காதலித்து வந்தார் அதன் பின்னர் நடிகை டாப்ஸியுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பின்னர் தற்போது பிரச்சி மிஸ்ரா என்பவரை காதலிக்கிறார் என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத் பங்குபெற்ற பின்னரே தெரியவந்தது.

மஹத் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விட்ட பின்னர் அவரது சமூக வலைதள பக்கங்களை பிரச்சி மிஸ்ரா தான் கவனித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் மஹத்தின் முக நூல் பக்கத்தில் நேரலையில் வந்த பிரச்சி மிஸ்ராவிடம் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

-விளம்பரம்-

Mahat

அப்போது ஒரு முகநூல்வாசி ஒருவர் ,நடிகர் மஹத் மற்றும் யாஷிகா செய்யும் செயல்களை குறித்து கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பிரச்சி மிஸ்ரா ‘மஹத் மற்றும் யாஷியா இருவரும் நல்ல நண்பர்கள்,மஹத் செய்வது தவறு என்று யாஷிகா கூறினால் தான் பிரசச்னை. ஆனால், அவர் அவ்வாறு கூறவில்லை. அதுமட்டுமல்லாமல் மஹத் எப்போது இப்படி தான் அனைவரிடமும் காமெடியாக இருப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.

Mahat-Raghavendra

மஹத் மற்றும் யாஷிகா செய்யும் சில அநாகரீக செயல்கள் மஹத்தின் காதலிக்கு வேண்டுமானால் சாதாரணமாக விடயமாக இருக்கலாம். ஆனால், அதனை பார்க்கும் பார்வையாளர்களுக்கு மஹத் மற்றும் யாஷிகா நட்பாக தான் பழகி வருகிறார்கள் என்று தோன்றவில்லை.
இவர்கள் இருவரும் செய்யும் செயல்கள் பார்ப்பவர்களுக்கு ரசிக்கும்படி இல்லாமல் எரிச்சலை தான் ஏற்படுத்துகிறது என்பது தான் உண்மை.

Advertisement