பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மஹத் கமிட் ஆகியுள்ள முதல் திரைப்படம்..! அதுவும் இந்த ஹீரோவுடன் தான்..!

0
1032
mahat
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் பெரும் புகழும் கிடைத்ததோடு ஒரு சிலருக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்று தந்துள்ளது . இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் போஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின்னர் யாஷிகா, ரித்விகா, ஜனனி என அனைவருக்கும் பட வைப்புகள் தேடி வந்தன.

-விளம்பரம்-

Mahath and simbhu

- Advertisement -

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மஹத்திற்கும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் யாருடனும் இல்லை நடிகர் சிம்புவுடன் தான். நடிகர் சிம்புவுடன் ஏற்கனவே “வல்லவன், AAA ” போன்ற படங்களில் நடித்துள்ளார் மஹத். நடிகர் சிம்பு தற்போது சுந்தர் சி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் தான் நடிகர் மஹத் கமிட் ஆகியுள்ளார். தெலுங்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் வெளியான “பவன் கல்யாண்” என்ற படத்தின் ரீ மைக்கை தான் இயக்குனர் சுந்தர் சி, சிம்புவை வைத்து எடுத்து வருகிறார். மேலும், இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கவிருக்கிறார்.

-விளம்பரம்-

ஏற்கனவே, இந்த படத்தில் யோகி பாபு கமிட் ஆனதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் மஹத்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மஹத், படத்தை பற்றிய மேலும் சில தகவல்கள் விரைவில் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement