ஆனால், நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத், யாஷிகா மீது காதல் இருப்பது உண்மை தான் என்று கூறியது போட்டியாளர்களுக்கு பார்வையாளர்களுக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணை காதலிக்கும் போது எப்படி வேறு ஒரு பெண் மீது காதல் வரும் என்று சமூக வலைத்தளத்தில் மஹத்தை வறுத்தெடுத்து வந்தனர்.
அதே போல மஹத்தின் காதலியிடமும் இதுகுறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு வந்த நிலையில், மஹத் மீதான காதலை தான் முறித்துவிட்டதாக பிரச்சி மிஸ்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னாள் மஹத், பிரச்சி மிஸ்ரா குறித்து பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்ட பிரச்சி மிஸ்ரா, அந்த விடீயோவிற்கு கீழே 'இப்படி தான் மஹத் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார். நான் காதலித்த ஒரு நபரை அந்த வீட்டிற்குள் அனுப்பி வைத்தேன்.
நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவாக கொண்டு வந்ததால் பல்வேறு தரப்பினரும் என்மீது அனுதாபபட்டு மெசேஜ் செய்கின்றனர். ஒன்றை மற்றும் அறிந்துகொள்ளுங்கள் மஹத் இப்படி தான் சென்றார்(அந்த வீடியோவில் மஹத் பேசியதை போல) அவர் என்மீது காதலில் இருந்தார், நான் காதலில் இருந்தேன். அனைவருக்கும் நான் கூறும் பதில், தற்போது நான் மஹத்தை காதலிக்கவில்லை, ஆனால், நான் அவரை சந்தித்து அனைத்தையும் கலந்தாலோசிப்பேன். மஹத், யாஷிகாவை காதலிப்பது தற்போது வெளிப்படையாகிவிட்டது. இது என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது. ஆனால், இதனால் என்னுடைய வாழ்க்கை மாறிவிட போவது இல்லை. என்னை நான் பார்த்துக்கொள்வேன். மஹத், மும்தாஜிடம், மஹத்தின் நலன் விரும்பியான ஜனனியிடமும் கூட உண்மையாக இருக்கவில்லை. இனிமேல் மஹத் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் காட்டிய அக்கரைக்கு நன்றி , இது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, இதை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.A post shared by Prachi Mishra (@mishraprachi) on Aug 21, 2018 at 4:13pm PDT





