பிரபல காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி திடீர் மரணம் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் மேடை காமெடி கலைஞரும் காமெடி நடிகருமான பாலாஜி. கலக்கப்போவது யாரு சீசன் 4ல தான் வடிவேல் பாலாஜி அறிமுகமானார். அந்த சீசன் எதிர்பார்த்தப்படி போகலை. வடிவேல் பாலாஜி அந்த சீசனோட வின்னரா இல்லைனாலும் வெளிய தெரிஞ்சார். அதுக்குக் காரணம், அவர் வடிவேலோட எல்லா மாடுலேஷனிலும் பேசுனதுதான்.
வடிவேல் வாய்ஸ்னா எல்லாரும், ‘வேணா… வலிக்கிது, அழுதுருவேன்…’னு ஒரே மாதிரிதான் பேசுவாங்க. ஆனால், வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேல் சாரோட அத்தனை மாடுலேஷனிலும் கலக்குவார்.அவர் என்ன கான்செப்ட் கொண்டுவந்தாலும் அதோட சேர்த்து நடுவர்கள்கிட்ட பேசி, கேள்வி கேட்டு ஏதாவது பண்ணிட்டே இருப்பார். சீசன் 4ல நடுவர்களா இருந்த பாண்டியராஜன் சாரும் உமா ரியாஸ் மேடமும், ‘வடிவேல் பாலாஜிகிட்ட பார்த்துதான் பேசணும். அடுத்தடுத்து கவுன்ட்டர் கொடுத்துட்டே இருக்கார்’னு சொல்லுவாங்க. அந்த அளவுக்கு தைரியமா நடுவர்களையும் கலாய்ப்பார்.
இப்படி ஒரு நிலையில் வடிவேல் பாலாஜி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக காலமாகி உள்ளார். வடிவேல் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் 15 நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.பின்னர் அங்கே சிகிச்சையை தொடர பணம் இல்லாததால் பின்னர் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து உள்ளார்.
இப்படி நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஈரோடு மகேஷ், வடிவேல் பாலாஜி குறித்து பேசியுள்ளார். அதில், சில நாட்களுக்கு முன்னர்தான் வடிவேல் பாலாஜி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய சகோதரர் எனக்கு போன் செய்து உதவி கேட்டார். நானும் சிலரிடம் உதவி கேட்டு இருக்கிறேன். அவருக்கு ஏன் இந்த நிலைமை நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவருடைய வீடியோக்களை அனைத்தையும் பார்த்தேன் இத்தனை பேரை சிரிக்க வைத்த மனிதர் இப்படி ஒரு நிலைமை என்று வருத்தப்பட்டேன். நீங்கள் நினைப்பதுபோல பிரபலங்கள் யாரும் வசதியான வாழ்க்கையை வாழவில்லை நாங்களும் மிகவும் சாதாரண வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வருகிறோம் என்று கூறியிருக்கிறார் ஈரோடு மகேஷ்