விக்ரம் படத்தில் இருந்து விலகிய முக்கிய நபர் – யார் – யார் தெரியுமா ? படக்குழுவிற்கே ஷாக்.

0
1742
vikram
- Advertisement -

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ். அந்த வெற்றி முத்திரையை தனது அடுத்த படமான ‘கைதி’யிலும் பதித்து சாதித்து காட்டினார். இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் பெயரைச் சொல்லி அவரை குறிப்பிட வருவதற்குள், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ இயக்குநர் ஆனார் லோகேஷ் கனகராஜ்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து யாரை வைத்து படம் எடுக்க போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி இருந்து வந்தது. இதற்கிடையில் சூப்பராக ஒரு கதையை ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனிடம் சொல்லி அசத்தி விட்டார் லோகேஷ் கனகராஜ் என்று செய்திகள் வெளியானது. இந்த படம் சூப்பர் ஸ்டாருக்கு 169-வது படமாம். இதில் ரஜினியின் நெருங்கிய நண்பரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான கமல் ஹாசன் கெஸ்ட் ரோலில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் தண்டோராபோடப்பட்டு கொண்டு இருந்தது.

இதையும் பாருங்க : குஷி படத்தின் கதையை விஜய்யிடம் சொல்லிவிட்டு எஸ் ஜே சூர்யா பார்த்த வேலை – நல்ல வேல அணிக்கு சோசியல் மீடியா இல்ல.

- Advertisement -

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் கமல் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. கமலின் 232 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்ற அதிராக பூர்வ தகவல் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியானது. இப்படி ஒரு நிலையில் கமலின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

சத்யன் சூரியன், கிரிஷ் கங்காதரன்

 தற்போது அப்படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் விலகி உள்ளாராம். மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் பணியாற்றிய சத்யன் சூரியன், கால்ஷீட் பிரச்சனை காரணமாக விக்ரம் படத்தில் இருந்து விலகிவிட்டாராம். அவருக்கு பதிலாக விஜய்யின் சர்கார் படத்தில் பணியாற்றிய கிரிஷ் கங்காதரனை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் தனது முதல் படத்தில் இருந்து ஒரே தொழில்நுட்ப குழுவுடன் தான் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement