அமரன் படத்திற்கு முன்பே மலையாள படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் இடம்பெற்றிருக்கும் காட்சி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சிவகார்த்திகேயனின் அமரன் படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது.
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது. அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள் என்ன? முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் காதல் மலர்ந்தது எப்படி? ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அமரன்’ படத்தின் கதை.
அமரன் படம்:
மேலும், இந்த படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறது. உலகம் முழுவதும் அமரன் படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரபலங்கள் பாராட்டு:
இந்தப் படத்தைப் பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் மட்டுமில்லாமல் பல அரசியல் தலைவர்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அதோடு ராணுவ வீரர்களுக்கும் இந்த படம் போட்டு காண்பிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் சமீபத்தில் வேலூர் அடுத்துள்ள ராணுவப் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு அமரன் திரைப்படம் இலவசமாக திரையிடப்பட்டிருந்தது. இதை பார்த்து பலரும் பாராட்டி இருந்தார்கள்.
முகுந்த் வரதராஜன் வீடியோ:
இந்நிலையில் முகுந்த் வரதராஜன் பற்றிய வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 2015 ஆம் ஆண்டு மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளிவந்த பிக்கெட் 43 மூவி படத்தில் ஒரு காட்சியில் முகுந்த் வரதராஜன் பெயர் இடம் பெற்றிருக்கிறது. அப்போது ராணுவ வீரர் ஒருவர், மூன்று பேர் இறந்து விட்டார்கள். அதில் முகுந்த் வரதராஜனும் ஒருவர் என்று சொன்னார்.
#Amaran Major Mukund Sir Refer in @PrithviOfficial Picket 43 Movie (2015) pic.twitter.com/caJ3pSIZgZ
— ALONE 🚶 (@itz_local_) November 12, 2024
வைரலாகும் வீடியோ:
அதற்கு பிரித்திவிராஜ், அய்யோ முகுந்த் சார் இறந்துவிட்டாரா! அவருக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கிறதே என்று ரொம்ப பீல் பண்ணி பேசி இருந்தார். அதற்கு அந்த ராணுவ வீரர், ஆமாம். இதுதான் நம்ம வாழ்க்கை என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோவை தான் இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.