அன்றும் இன்றும் என்றென்றும் தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். காலங்கள் பல கடந்தாலும் தன்னுடைய ஸ்டைலாலும், நடிப்பாலும் கோடிக்கணக்கான மக்களை தன்பக்கம் கட்டிப்போட்டவர். இவர் தமிழ் சினிமா உலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். தற்போது ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பைத் தாண்டி அரசியலில் களம் இறங்கப் போகிறார் என்று சில வருடங்களாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் இவர் அடுத்த வருடம் நடைபெறும் தேர்தலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது ரஜினிகாந்த் அவர்கள் சினிமா உலகில் கொடிகட்டி பறக்கும் நட்சத்திரமாக இருக்கலாம். ஆனால், அவர் இந்த இடத்தை அடைய பயங்கரமாக கஷ்டப்பட்டு வந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் அவர்களின் அரிய புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் அவர்கள் ஆரம்பத்தில் பஸ் நடத்துனராக தான் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.
அந்த சமயத்தில் தான் இவருடைய ஸ்டைலால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு தன்னுடைய கடின உழைப்பாலும்,விடா முயற்சியாலும் ரஜினி அவர்கள் சினிமாவில் உச்சத்திற்கு சென்றார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பேருந்து நடத்துனராக இருக்கும் போது தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இது இதுவரை யாரும் காணாத அரிய புகைப்படம். இதை ரசிகர்கள் டிரன்டிங் செய்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த தர்பார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா நடிக்கிறார்கள். இவர்களுடன் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.