8 கிலோமீட்டர் தேடல்,700 அடி பள்ளம், படத்திற்காக போடப்பட்ட பாதை – குணா படத்திற்காக கமல் பட்ட கஷ்டம்.

0
348
- Advertisement -

கமலஹாசனின் குணா குகையை குறித்து பலரும் அறியாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படம் கடந்த 22 ஆம் தேதி தான் வெளியாகியிருந்தது. இந்த படத்தை சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார். அதோடு இந்த படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. சொல்லப்போனால், மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பாராட்டைப் பெற்று வருகிறது.

- Advertisement -

மஞ்சுமெல் பாய்ஸ் படம்:

இந்த படம் திரையிடப்பட்ட திரையரங்கில் எல்லாம் ஹவுஸ்புல் காட்ச்சிகளாகவே இருக்கின்றது. அந்த அளவிற்கு மஞ்சுமெல் பாய்ஸ் படம் சக்கை போட்டு ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படம் முழுக்க முழுக்க கொடைக்கானலில் உள்ள பகுதிகளில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்த படம் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. நடிகர் கமலஹாசனின் நடிப்பில் வெளிவந்து பிரபலமான படங்களில் ஒன்று குணா.

குணா படம்:

இந்த படத்தின் பாடல்களும் காட்சிகளும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருக்கிறது. அதுவும் கமலஹாசனின் குணா படத்தில் ஒரு குகை வரும். அதனால் தான் இந்த இடத்திற்கு குணா குகை என்று பெயர் வந்தது. நீண்ட இடைவெளிக்கு பின் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா குகை இடம்பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த குணா குகையை கண்டுபிடிக்க கமலஹாசன் கொஞ்சம் நஞ்சம் கஷ்டப்பட்டது கிடையாது. இந்த குகையை குறித்து குணா படம் வெளியாவதற்கு முன்பே கமலஹாசன் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

-விளம்பரம்-

கமல் பேட்டி:

அதில் அவர், நான் ரொம்ப நாளைக்கு பிறகு வித்தியாசமாக ஒரு காதல் கதை பண்ணியிருக்கிறேன். இந்த படத்துக்காக நானும் சந்தான பாரதியும் கொடைக்கானல் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறாத மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் படமாக்க வேண்டும் என்பதை நினைத்து தேடிக் கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட ஏழு கிலோமீட்டர் வரை தேடிக் கொண்டிருந்தோம். எதுவுமே கிடைக்கவில்லை. திரும்பி போகலாம் என்று நினைக்கும் போது தான் இன்னும் ஒரு கிலோமீட்டர் போய் பார்க்கலாம் என்று நினைத்தபோத தான் எங்களுக்கு ஆச்சரியம் கிடைத்தது.

குணா குகை குறித்த தகவல்:

அந்த எட்டாவது கிலோமீட்டரில் தான் நாங்கள் தேடியபடி இடங்கள் கிடைத்தது. அந்த இடத்தில் தான் சர்ச் செட் போட்டோம். அதேபோல் ஷூட்டிங் நடந்த அந்த இடத்திற்கு செல்ல பாதை அமைத்தோம். இதே போல் பட குழுவினர் அனைவரும் 700 அடி பள்ளத்தாக்கிற்கு கயிரில் தொங்கியபடி சென்றோம் என்றெல்லாம் கூறியிருந்தார். இப்படி கமலின் குணா குகையை பற்றி தகவல் வெளியானதை தொடர்ந்து பலருமே குணா படத்தை மீண்டும் பார்த்து வருகிறார்கள்.

Advertisement