பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் வாட்டர் மிலான் ஸ்டார் திவாகர்.
இவர் ரீல்ஸ் வீடியோ மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதற்கு பிறகு இவர் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். பின் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு இவர் சினிமா, நிகழ்ச்சிகள் என்று பிசியாக வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்ள திவாகர் சென்றிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=sD5Eg5iWp_A
அங்கு நடந்த சம்பவம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. திவாகர் பேட்டியில், செட்டில் மாகாபா ஆனந்த், கானா வினோத், புகழ் மூன்று பேருமே என்னை குடித்துவிட்டு அடித்துவிட்டார்கள்
புகழுக்கு என்னை பிடிக்கவே இல்லை. என்னை பார்த்ததுமே முகம் சுளித்து போனான். புகழால் தான் இந்த நிகழ்ச்சிக்கு குரேஷி வரவே இல்லை. வினோத் ஏற்கனவே என்னை பிக் பாஸில் ரொம்ப மோசமாக நடத்தினார். அதேபோல் இந்த நிகழ்ச்சியிலும் என்னை தர குறைவாக பேசினார். என்னுடைய குடும்பத்தை பற்றியும் மோசமாக பேசியிருந்தார்.
திவாகர் கொடுத்த புகார்:
என்னை ஒரு இரும்பு கம்பியால் காலில் அடித்து விட்டார்கள். அதனால் தான் நான் போலீசில் புகார் கொடுத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். இதை அடுத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு கானா வினோத், மாகாபா,புகழ் ஆஜரானார்கள். அதற்குப்பின் செய்தியாளர்கள் சந்திப்பில், செட்டில் திவாகர் ரொம்ப மோசமாக பெண்களிடம் பேசி இருந்தார். அதனால் தான் சேனல் நிர்வாகமே அவரை வெளியே அனுப்பி இருந்தது.
https://www.youtube.com/watch?v=cNky6lkIQi8
ஆனந்த்,புகழ் பேட்டி:
விஜய் டிவி சீரியல் நடிகைகளிடமும் முகம் சுழிக்கும் அளவிற்கு அவர் பேசி இருந்தார். அவர் திவாகர் மீது புகார் கொடுத்து நிகழ்ச்சி வந்து நீக்கினார்கள். இதை நான் தான் செய்தேன் என்று அவர் என் மீது கோபப்படுகிறார். நான் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் நிகழ்ச்சியில் நின்று கொண்டு வேலை பார்க்கிறேன். குடித்திருந்தால் எப்படி என்னால் இருக்க முடியும். திவாகர் தகாத வார்த்தையில் பெண்களிடம் ரொம்ப தப்பாக பேசுகிறார்.
https://www.youtube.com/watch?v=FRTJ0-rMw-I
திவாகர் செய்த வேலை:
நிகழ்ச்சியில் ஒரு கணவன் முன்னே அவருடைய மனைவியின் தோள் மீது கை போட்ட திவாகர், இவ்வளவு நாள் அவர் கூட இருந்துட்ட ஒரு நாள் என் கூட இரு என்றெல்லாம் பேசி இருந்தார். ஆபாசமாக பேசுவது ஜாதியை பற்றி பேசுவது என்று மோசமாக நடந்து கொண்டிருக்கிறார. இதற்கு எங்களிடம் ஆதாரமும் இருக்கிறது. நாங்கள் யாரையும் குடித்துவிட்டு அடிக்கவில்லை என்று பேசி இருக்கிறார்கள்.





