சங்கீதா மேம் வீட்டுக்கு வர சொன்னாங்க, விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மேக்கப் ஆர்டிஸ்ட்

0
192
- Advertisement -

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விஜய் குறித்து வரும் விவாகரத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது ஒரு செய்தி வந்திருக்கிறது. கோலிவுடில் சிறந்த நட்சத்திர சம்பாதிக்களாக திகழ்ந்து வருகிறார்கள் நடிகர் விஜய் -சங்கீதா. இவர்களுக்கு திருமணம் ஆகி 25 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு காலமாக என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜயின் தீவிர ரசிகைதான் சங்கீதா. விஜயன் தீவிர ரசிகையான சங்கீதா, விஜயை சந்திப்பதற்காக சென்னைக்கு வந்து விஜய் பெற்றோர்களையும் சந்தித்திருக்கிறார்.

-விளம்பரம்-

சங்கீதாவை விஜய் பெற்றோர்களுக்கு பிடித்துப் போக சங்கீதாவிடம் விஜயை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு சங்கீதாவும் சம்மதித்து இருக்கிறார். ஆனால், ஆரம்பத்தில் இந்த திருமணத்திற்கு யோசித்து இருக்கும் விஜய் பின்னர் பெற்றோர்களின் ஆசைக்காக சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 25 ஆண்டுகளாக சங்கீதாவுடன் வாழ்ந்து வந்த விஜய் சமீப காலமாக சங்கீதாவை பிரிந்து விட்டதாக செய்திகள் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

விஜய்- சங்கீதா விவாகரத்து:

வழக்கமாக சங்கீதா எப்போதும் விஜய் படத்தின் பிரமோஷன், இசை வெளியீட்டு விழா என்று எதுவாக இருந்தாலும் வந்து விடுவார். ஆனால், சில ஆண்டுகளாக சங்கீதா விஜய் படத்தின் எந்த விழாவிலும் கலந்து கொள்வதில்லை. குறிப்பாக, நடிகர் விஜய் சமீபத்தில் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் கட்சியை அறிவித்து அதற்கான கொடியேற்றும் விழா மற்றும் மாநாடு எல்லாம் நடத்தி இருந்தார். அந்த விழாவில் கூட விஜயின் மனைவி சங்கீதா பங்கேற்கவில்லை. இதன் காரணமாகவே இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று சமீப காலமாக சில சர்ச்சைகள் எழுந்து கொண்டிருக்கிறது.

மேக்கப் ஆர்டிஸ்ட் விஜி:

இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட் விஜி, நான் விஜய் சாரோட பெரிய ரசிகை. அவருடைய வீட்டுக்கு போயிட்டு அவரை பார்க்க முடியாமல் போய்விட்டது. அவருடைய மனைவி மற்றும் பையனை எல்லாம் பார்த்தேன். ஆனால், அவரை பார்க்க முடியாமல் போய்விட்டது. நான் ரெண்டு நிகழ்ச்சிகளுக்கு சங்கீதா மேமுக்கு மேக்கப் செய்திருந்தேன். ஒரு நிகழ்ச்சி லீலா பேலஸில் நடந்தது, அன்னைக்கு விஜய் சாரோட மகனையும் பார்த்தேன். உண்மையாகவே எனக்கு அப்போ எங்கையோ பறக்கிற மாதிரி இருந்தது. சங்கீதா மேம் ரொம்ப ஜோபியலா இருந்தாங்க. முதலில் என்னை வெளியே லாபில வெயிட் பண்ண சொல்லி இருந்தாங்க. நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

-விளம்பரம்-

சங்கீதா குறித்து சொன்னது:

அப்போ ‘விஜி நீங்க தான வாங்க’ என்று சங்கீதா மேம் உள்ள வர சொன்னாங்க. எனக்கு அப்போ உடனே அவங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. நம்ம எப்பயாவது ஒரு டைம் தானே அவங்களை சோசியல் மீடியால பார்க்கிறோம். அதனால் என்னால அவங்கள கண்டு பிடிக்க முடியவில்லை. அவங்க ரொம்ப கூல் டைப். அவங்க ரொம்ப மேக்கப் எல்லாம் போடுறது கிடையாது. இரண்டாவது நாளும், விஜியை கூப்பிடுங்க அவங்க தான் பண்ணனும் என்று சொன்னாங்க. முதல் நாள் பிடிக்கவில்லை என்றால் நான் மேக்கப் எடுத்து விடுவேன் என்று சொல்லிட்டே இருந்தாங்க. எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது நடிகை அதிதி தான். அவங்க அக்கா கல்யாண நிகழ்ச்சிகளுக்கு தான் நான் சங்கீதா மேம்க்கு மேக்கப் போட்டேன்.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி:

இரண்டாவது நாள் வீட்டுக்கே கூப்பிட்டாங்க. எனக்கு அப்போ விஜய் சார் வீட்டோட கேட்டை பார்த்த உடனே ரொம்ப பிரம்மிப்பா ஆகிவிட்டது. சின்ன வயதில் இருந்தே விஜய் ரசிகர்களாய் இருக்கிறவங்களுக்கு அது தெரியும். அப்புறம் உள்ள போயிட்டு சங்கீதாவுக்கு மேக்கப் எல்லாம் முடிச்சுட்டு வந்தோம். நான் ரொம்ப பீல் பண்ண விஷயம் என்ன என்றால் ஒரு செல்பி கூட எடுக்காம வந்துட்டோமே என்பது தான். ஆனால், அதிதி சொல்லும் போதே அவங்க ரொம்ப பப்ளிக்கா இருக்க விரும்ப மாட்டாங்க. அதனால் வீடியோ எதுவும் எடுக்காதீங்க என்று சொல்லிட்டாங்க என்று கூறியுள்ளார். எனவே விஜய்யுடன் சங்கீதா ஒரே வீட்டில் இருப்பது, இவர் கூறியதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. அதோடு இதுவரை வந்த விவாகரத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement