ஒரு பக்கம் கடன், இன்னொரு பக்கம் மூணு வயது குழந்தை- மனம் திறந்த நடிகை மாளவிகா அவினாஷ்

0
185
- Advertisement -

பிரபல குணசித்திர மற்றும் சீரியல் நடிகை மாளவிகா அவினாஷ் சமீபத்தில் அளித்த பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மாளவிகா கடந்த 23ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளிவந்த ‘ஜேஜே’ படத்தில் ஜமுனாவின் சகோதரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து இவர் ஆறு, ஆதி, கண்மணி என் காதலி, ஜெயம் கொண்டான், வந்தான் வென்றான், பைரவா, கைதி, எனிமி மற்றும் கேப்டன் போன்ற தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம் மொழியிலும் அதிகம் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் கேஜிஎஃப் படத்தின் அனைத்து பாகங்களிலும் நடித்து பிரபலமானவர். இவர் வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார். அந்த வகையில் இவர் ராஜ ராஜேஸ்வரி, சிதம்பர ரகசியம், அண்ணி, அரசி, செல்லமே, காற்றுக்கென்ன வேலி, கண்ணெதிரே தோன்றினாள் என பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

மாளவிகா அவினாஷ் பேட்டி:

இதற்கிடையே கடந்த 2001 ஆம் ஆண்டு இவர் பிரபல கன்னட நடிகர் அவினாஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காலவ் என்கிற மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் மாளவிகா தான் வீடு கட்டிய கதையை பேசியிருக்கிறார். அதில், சினிமா வாழ்க்கை நிரந்தரமானது இல்லை என்பது எல்லாருக்குமே தெரியும். கடந்த 20 வருடங்களுக்கு முன்னால் நாம் வாழ்ந்த வாழ்க்கை முறையானது வேறு. ஆனால், இப்போ வேறு.

பெரியோர்களுக்கு அது தெரியும்:

அப்போதெல்லாம் நமக்கு எல்லாருக்கும் கொரோனா தொற்று வரப்போகிறது. அந்த சமயத்துல நம்ம பாக்கெட்டில் ஒரு பைசா இருக்காது என்பது எல்லாம் தெரியாது. ஆனால், நம்ம வீட்ல இருக்கிற பெரியவர்களுக்கு அது நன்றாக தெரியும். என்னுடைய அப்பா தான் இவ்வளவு பெரிய இடத்தை வாங்கி போட சொன்னது. முதலில் என்னுடைய கணவர் அவிநாஷுக்கு அதில் சுத்தமாக ஈடுபாடு கிடையாது. அவர் சின்னதா ஒரு பிளாட் வாங்கி அதில் இருந்து விடலாம் என்று சொன்னார். ஆனால், என்னுடைய அப்பா அதை கடைசி வரை விடவே இல்லை.

-விளம்பரம்-

பேங்கில் லோன் கொடுக்கவில்லை:

மேலும், என் அப்பா தான் கண்டிப்பாக இடம் வாங்கி தான் வீடு கட்ட வேண்டும் என்று கூறினார். நான் பேங்கில் லோன் கேட்டுச் சென்றால், நான் நடிகை என்பதால் எனக்கு லோன் தர மறுத்துவிட்டார்கள். அப்போது என்னுடைய அப்பா வங்கியில் பணிபுரிந்து வந்தார். அதன் மூலம்தான் எனக்கு லோன் கொடுக்கப்பட்டது. எப்பவுமே நீங்க சம்பாதிக்கும் பணம் 5 லட்சம் என்றால், நீங்கள் கட்டும் வீடு கண்டிப்பாக 10 லட்சத்துக்கு மேல் இருக்கும். நமக்கு பிடித்த வீட்டை கட்ட வேண்டுமென்றால் நாம் இப்படி தான் கட்டியாக வேண்டும்.

நானும் கடன் வாங்கினேன்:

அதோடு நம்ம வீட்டை பாதிதான் கட்டியிருப்போம். அதற்குள் நம் லோன் பணம் முழுவதும் செலவழிந்து விடும். அதற்குப் பிறகு நாம் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி கட்டுவோம். நானும் அப்படித்தான். எங்க வீட்டில் மூன்று பெரியவர்கள் மற்றும் என்னுடைய பையன் இருக்கிறோம். ஆனால், வீடு ரொம்ப பெருசு. இந்த வீட்டை கட்டும்போது யார் இந்த வீட்டை சுத்தம் செய்வது என்று என் அப்பாவிடம் சண்டை போட்டேன். இப்பெல்லாம் எடுபிடி வேலைக்கு கூட யாரும் வருவது கிடையாது. ஆனா, அவர் இந்த வீட்டில் தான் நான் சாகப் போகிறேன் என்றார். அதே மாதிரி தான் வீடு கட்டி இந்த வீட்டில்தான் அவர் இறந்தார்.

எட்டு மாதம் ஆனது:

நான் அந்த வீட்டைக் கட்டும் பொழுது, ஆர்க்கிடெக்கை அடிக்காத குறை தான் அவ்வளவு கேள்விகள் கேட்பேன். நீங்கள் வீடு கட்டுகிறீர்கள் என்றால், தினமும் அந்த இடத்திற்கு வர வேண்டும் இல்லையென்றால் அவன் நீங்கள் செங்கல் வைக்க சொன்ன இடத்திற்கு மாற்றாக இன்னொரு இடத்தில் அதை வைத்து விடுவான். இந்த வீடு கட்ட 8 மாசமானது. தினமும் நான் இங்கு வந்து நிற்பேன். அப்போ என்னுடைய பையனுக்கு மூணு வயசு அவனையும் சமாளிப்பேன். இந்த வீட்டு வேலைகளையும் பார்ப்பேன். இது போன்ற பலதரப்பட்ட வேலைகளை பெண்களால் மட்டும் தான் செய்ய முடியும். ஆண்களுக்கு எல்லாம் அது சுட்டு போட்டாலும் வராது என்று கூறியுள்ளார்.

Advertisement