விஜய் இப்படி ஒரு கதைல நடிக்ச்சி பல வருஷம் ஆச்சி, அப்படி ஒரு கேரக்டரில் அவர் கூட மீண்டும் நடிக்கணும் – மாளவிகா.

0
580
malavika
- Advertisement -

தளபதி விஜய் ரொமான்டிக் கேரக்டரில் நடித்தால் மீண்டும் அவருடன் ஜோடி சேர ஆசையாக இருக்கிறது என்று மாளவிகா மோகனன் கூறி இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாள நடிகையும் ஆவார். இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் ஆஸ்கர் ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’ படம் மூலம் தான் இந்தியில் அறிமுகமானார். பின் கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். பிறகு இவர் தமிழில் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம் இறங்கினர். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்து விளக்காக நடித்திருந்தார் மாளவிகா.

-விளம்பரம்-

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் என்று பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும் நடித்திருந்தார். மேலும், பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனை பலரும் வயதான நடிகை என்று தான் ஆரம்பத்தில் நினைத்தனர்.

- Advertisement -

மாஸ்டர் படம்:

ஆனால், சமூக வலைதளத்தில் இவரது கவர்ச்சிக்கு அளவில்லாமல் இருப்பதை பார்த்து பலரும் வியந்து போய் விட்டார்கள். பின் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் மாளவிகா மோகனன் நடித்து இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. தற்போது இவர் பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார.

மாறன் படம்:

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இவர் மாறன் படத்தில் நடித்து உள்ளார். இந்தப்படத்தில் தனுஷ், சமுத்திரகனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளது மேலும், காதலர் தினத்தையொட்டி இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதுவுமட்டும் இல்லாமல் படத்தில் தனுஷ் மற்றும் மாளவிகாவின் கேரக்டர் பெயர்களையும் வெளியிட்டுள்ளது. மாறன் மற்றும் தாரா என்ற கதாபாத்திரங்களில் இருவரும் நடித்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க, மாளவிகா மோகனன் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

-விளம்பரம்-

விஜய் உடன் நடிக்க ஆசை:

இவர் தான் அடிக்கடி நடத்தும் போட்டோ ஷூட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு ரசிகர்களின் பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார் மாளவிகா மோகனன். அதில், மீண்டும் விஜயுடன் சேர்ந்து நடிப்பீர்களா? அவ்வாறு நடிப்பதாக இருந்தால் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு மாளவிகா கூறியது, தளபதி விஜய் ஒரு முழுநீள ரொமான்ஸ் படத்தில் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அப்படி ஒரு படத்தில் அவர் திரும்ப நடித்தால் அவருடன் இணைந்து நடிக்க ஆசை என்று தெரிவித்திருக்கிறார்.

தனுஷுடன் நடித்த அனுபவம்:

தனுஷுடன் நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நல்ல அனுபவம். அதோடு மாஸ்டர் கிளாஸ் நடிப்பு திறமை உள்ளவர். மாறன்’ படத்தின் ரிலீஸ் தேதிக்காக நானும் காத்திருக்கிறேன். தனுஷ் என்னை ‘மால்மோ’ என்று தான் செல்லமாக அழைப்பார் என்று தெரிவித்திருந்தார்.

அல்லு அர்ஜுன் குறித்து ஒரே வார்த்தையில் கூறுங்கள்:

அல்லு அர்ஜுன் ‘மாஸ்’. அவருடைய புஸ்பா படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்தது. புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஸ்ரீவள்ளி பாடல் ரொம்ப பிடிக்கும் என்று கூறி இருக்கிறார். இப்படி ரசிகர்களின் கேள்விகளுக்கு மாளவிகா மோகனன் சுவாரஸ்யமாக பதிலளித்திருக்கிறார். தற்போது இவர் பதில் அளித்து இருக்கும் பதிவெல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

Advertisement