மாஸ்டர் படத்தினால் மீம் மெட்டீரியலாக மாறிய மாளவிகா – எப்படி எல்லாம் மீம் போட்டு கலாய்க்குறாங்க பாருங்க.

0
5099
malavika

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் வசூலிலும் சாதனை படைத்தது. 10 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது. இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜனவரி 29 ஆம் தேதி இந்தியா உட்பட 240 நாடுகளில் வெளியாக இருப்பதாக அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.ஏற்கனவே கொரோனா அச்சம் காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் தான் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பதால் திரையரங்க உரிமையாளர்கள் இந்த திரைப்படத்தை இன்னும் சில நாள் ஓட்ட திட்டமிட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க : ரோஜா சீரியல் நடிகையின் அம்மா மற்றும் அப்பாவை பார்த்துள்ளீர்களா ? இதோ புகைப்படம்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை OTT வெளியிட்டுள்ள முடிவு திரையரங்க உரிமையாளர்களை கொஞ்சம் அதிருப்த்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தில் மாளவிகா, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், சாந்தனு என்று பலர் நடித்திருந்தாலும் இவர்களுக்கு எல்லாம் படத்தில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் பல மீம்களை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில், இந்த படத்தில் நடித்த மாளவிகா மோகனையும் விட்டு வைக்காத மீம் கிரியேட்டர்கள். பல்வேறு விதமான மீம்களை போட்டு பங்கம் செய்து வருகின்றனர். இதற்கு முன்னாள் சர்க்கார் படத்தில் விஜய்யுடன் நடித்த கீர்த்தி சுரேஷ், பிகில் படத்தில் நடித்த நயன்தாரா போன்றவர்கள் அந்த படத்தில் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்று மீம் கிரியேட்டர்கள் கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாராவை வச்சி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement