சமீபத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் “பிகில்” படம் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். விஜயின் பிகில் படம் ரசிகர்களை தெறிக்க விட்டது. இது அனைவருக்கும் தெரிந்ததே. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் அடுத்த படம் மாஸ்டர். இந்த படம் குறித்த பல தகவல்கள் இணையங்களில் வெளி வந்து உள்ளது. இந்த படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்குகிறார்.
விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
பொதுவாகவே நடிகைகளுக்கு பெரிய பிரபலங்களின் படத்தில் எந்த வேலையும் இருக்காது. பெரிய பிரபலங்களின் படத்தில் நடிகைகள் கிளாமர் போஸ் மட்டும் கொடுத்தால் போதும் என்ற குற்றசாட்டு சமூக வலைதளங்களில் பரவுவது வழக்கம் தான். ஆனால், மாஸ்டர் படத்தில் நடிகை மாளவிகா மோகன் அவர்கள் பல வேலைகளை செய்து உள்ளார் என்ற தகவல் வந்து உள்ளது. நடிகை மாளவிகா மோகனன் அவர்கள் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் பாருங்க : ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசிய விஜய். வீடீயோவை ட்ரெண்ட் செய்யும் ரஜினி ரசிகர்கள்.
இந்நிலையில் இந்த மாஸ்டர் படத்தில் அவர் விஜயுடன் காதல் டூயட் பாடுவது மட்டுமின்றி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்காக நடிகை மாளவிகா ஒரு சில பயிற்சிகளை மேற்கொண்டு இருப்பதாக தகவல் வந்து உள்ளது. இவர் தன்னுடைய கதாபாத்திரத்துக்காக ’parkour’ என்ற கலையை பயிற்சி எடுத்து வருகிறார். பிரான்ஸ் நாட்டில் தான் முதலில் தோன்றியது. இந்த பயிற்சியின் மூலம் இவர் இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடிக்கப் போவதாகவும், விஜய் சேதுபதியுடன் மோதும் ஆக்சன் காட்சிகளில் நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இது ரசிகர்களுக்காக என்றும் கருதுகிறார்கள். ஏற்கனவே படத்தில் விஜய், விஜய் சேதுபதி மோதும் கிளைமாக்ஸ் காட்சியை வேற லெவல்ல பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி, மாளவிகா மோதும் காட்சி படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறுகிறார்கள். மாஸ்டர் படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். இந்த படம் அதிரடியான ஆக்ஷன் படமாக அமையும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு கல்லூரி பேராசிரியர் ஆக நடிப்பது என்பது ஏற்கனவே நமக்கு தெரிந்தது. அதனால் தான் இந்த படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் அதிரடியான ஆக்ஷன் படமாக அமையும் என்று கூறப்படுகிறது. அதோடு இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.