ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசிய விஜய். வீடீயோவை ட்ரெண்ட் செய்யும் ரஜினி ரசிகர்கள்.

0
1959
Vijay-Rajini
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நடிப்பில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சர்கார் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய படம் “தர்பார்”. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் முதல் முறையாக இந்த தர்பார் படத்தின் மூலம் இணைந்து உள்ளார்கள். இந்த தர்பார் படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரை அரங்கில் வெளியானது. இந்த படத்தில் வில்லனாக சுனில் ஷெட்டி நடித்து இருக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடித்து உள்ளார். ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இவர்களுடன் இந்த படத்தில் யோகி பாபு, ஸ்ரீமன், ஸ்ரேயா சரண், பிரதீப் பப்பர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். மேலும், படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்து உள்ளார். அதோடு படத்தின் ஒவ்வொரும் பாடலும் சும்மா கிழி தான். ரஜினிகாந்தின் தர்பார் படம் வெளியாகி ரசிகர்கள் அனைவரும் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அன்றும் இன்றும் என்றும் தலைவர் தான் என்று ரசிகர்கள் டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றார்கள். தற்போது இது தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் ட்விட்டரில் மொத்தமாக ரஜினி ரசிகர்களே ஆக்கிரமித்து விட்டார்கள் என்று கூட கூறலாம்.

இதையும் பாருங்க : நான் காட்சியை கெடுத்துவேன் வேண்டாம் என்றார் சூர்யா. கௌதம் மேனன் சொன்ன ரகசியம்.

- Advertisement -

அதில் ரசிகர்கள் கூறியது,கோலிவுட்டில் வெளியிடப்படும் எந்த படமும் தலைவர் படத்தை முந்தியது கிடையாது. அவருக்குக் கீழ் தான் இருக்கிறது. தலைவரை எதிர்ப்பவர்களும் அவருக்கு கீழ் தான் இருப்பார்கள் என்று ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள். இது அடுத்த எம்ஜிஆருக்கு வந்த கூட்டம் அல்ல. சூப்பர் ஸ்டார் ரஜினி என் தலைவருக்கு வந்த கூட்டம் என்று பதிவிட்டுள்ளார். ரஜினி படத்தின் வசூலில் யாரும் முன்வரவில்லை என்பதை குறிப்பிடும் விதமாக ஒரு பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிக் கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இவர் சில வருடங்களுக்கு முன்னால் சொன்னா வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அது என்னவென்றால் நடிகர் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நான் ஒரு நடிகராக சொல்லவில்லை. சாதாரண மக்களாக, ரசிகனாக சொல்கிறேன். அவர் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும். இது என்னுடைய ஆசை என்றும் கூறியிருந்தார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரும் சில வருடங்களுக்கு முன்னால் பதிவிட்ட பதிவுகள் எல்லாம் தற்போது ஒன்றாக சேர்த்து பதிவிட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி காந்த் நடிக்கும் அடுத்த படம் “தலைவர் 168”. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் ரஜினியுடன் இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள் என்ற தகவல் வந்து உள்ளது. இந்த படத்திற்கு வெற்றி அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.

Advertisement