நான் நயன்தாராவை அப்படி சொன்னேனா ? – முதல் முறையாக விளக்கம் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாளவிகா.

0
509
Malavika
- Advertisement -

சமீப காலமாக நயன்தாரா குறித்து தொடர்ந்து பொறாமையுடன் பேசி வருவதாக சர்ச்சையில் சிக்கி வரும் மாளவிகா மோகன் இந்த விவகாரம் குறித்து முதன் முறையாக விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா ஹீரோக்கள் ஆதிக்கம் நிறைந்த ஒரு துறையில் ஒரு நடிகையாக இருந்து கொண்டு தனக்கான ஒரு இடத்தை பிடிப்பது எல்லாம் ஒரு நடிகையாக அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.

-விளம்பரம்-

நடிகை நயன்தாரா நடிப்பில் இறுதியாக வெளியான கனக்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படம் வெளியாவதற்கு முன்னர் இந்த படத்தின் promotion நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் நயன். அப்போது பேசிய அவர் ‘தன் மீதான பல விமர்சனங்கள் குறித்து பதில்அளித்து இருந்தார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜா ராணி படத்தில் தான் நடித்த ஹாஸ்பிடால் காட்சியை மறைமுகமாக கேலி செய்த மாளவிகா மோகனுக்கு பதிலடி கொடுத்து இருந்தார்.

- Advertisement -

கடந்த ஆண்டு பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாளவிகா மோகனிடம் ” ‘தமிழ் சினிமாவில் வேடிக்கையான லாஜிக் பற்றி சொல்லுங்கள்’ என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன், நான் உண்மையில் பெரிய சூப்பர் ஸ்டார் நடிகையைப் அப்படி பார்த்திருக்கிறேன், ஒரு மருத்துவமனை காட்சியில், அவர் கிட்டத்தட்ட இறந்து கொண்டிருக்கிறார், ஆனால், முழு மேக்கப்பில் கண் லைனர், அழகான முடி, என்று இருப்பார்.அதை பார்த்த போது எப்படி ஒருவர் இறக்கும் நிலையில் லிப்ஸ்டிக்கோடு இருப்பார் என்று தான் தோன்றியது. அது ஒரு கமர்ஷியல் படமாக இருந்தாலும், நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்றாலும், அது கொஞ்சம் யதார்த்தமாக இருக்க வேண்டும் இது கொஞ்சம் லாஜிக்கை மீறி இருந்தது என்று கூறி இருந்தார்.

மாளவிகா மோகனின் இந்த பதிலை கேட்டு ரசிகர்கள் பலரும் அவரை கலாய்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இதற்கு பதில் அளித்து நயன் ” ‘ ஹாஸ்பிடல் சீன என்பதால் அதுக்காக முடியை விரிச்சு போட்டுட்டா உட்கார்ந்து இருக்க முடியும். ரியலிஸ்டிக் படங்களுக்கும் கமர்சியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. சோகமாக இருக்க கூடாது என இயக்குனர் கூறினார். அவர்களுக்கு தேவையான விதத்தில் தான் நடிக்க சொல்வார்கள். அது போல தான் நடித்தேன்’ என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாளவிகா மோகனன் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசி மீண்டும் நயன்தாராவை சீண்டி இருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாளவிகா ‘லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தில் எனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. நடிகர்களைப் போல நடிகைகளும் சூப்பர் ஸ்டார் என்று தான் அழைக்கப்பட வேண்டும். இதில் லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடுவது அவசியம் இல்லை.

தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா கைஃப் போன்றவர்களை நாம் லேடிசூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில்லை அவர்களெல்லாம் சூப்பர் ஸ்டார் என்று தான் அழைக்கிறோம்’ என்று கூறியுள்ளார். ஆனால், இப்போதும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன் பெயரை மட்டும் மாளவிகா சொல்லவே இல்லை. இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலர் இன்னமும் நயன் மீது பொறாமை போலையா என்று கேலி செய்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளித்துள்ள மாளவிகா மோகன் ‘லேடி சூப்பர்ஸ்டார் பற்றிய எனது கருத்து பெண் நடிகர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பாலின சொல்லைப் பற்றியது மட்டுமே. நான்  எந்த குறிப்பிட்ட நடிகையை பற்றியும் பேசவில்லை. நான் நயன்தாராவை மிகவும் மதிக்கிறேன், அவரது நடிப்பைப் பாராட்டுகிறேன், மேலும் ஒரு சீனியராக அவரது நம்பமுடியாத பயணத்தை நான் கண்டு வியக்கிறேன். தயவு செய்து அமைதியாக இருங்கள். அதிலும் குறிப்பாக சில்லறை மீடியாக்கள் ” என மாளவிகா மோகனன் டென்ஷனாகி பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement