சத்ரியன் பட நடிகரின் மகன் இறப்பு. திரையுலகினர் அஞ்சலி.

0
28089
- Advertisement -

மலையாள சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் திலகன். இவர் தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த சத்ரியன் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலமே நடிகர் திலகன் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இவர் தமிழ் சினிமா உலகில் வருவதற்கு முன் மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர். இவர் தன்னுடைய நடிப்பிற்காக பல விருதுகளையும் வாங்கி உள்ளார். இவர் 2012 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்தார். அப்போது அவருக்கு 77 வயது.

-விளம்பரம்-
 thilakan sons

- Advertisement -

இவருக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளார்கள். இதில் மூத்த மகனின் பெயர் தான் ஷாஜி திலகன். நடிகர் ஷாஜியின் சகோதரர்கள் ஷம்மி திலகன், ஷோலி திலகன் ஆகியோரும் மலையாள சினிமாவில் நடிகர்களாக உள்ளனர். இவர் தன்னுடைய அப்பாவை போல் சினிமாவில் சாதிக்க நினைத்தார். ஆனால், தன் அப்பா போல சினிமாவில் இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் இவர் டிவி தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். பெரும்பாலும் இவர் தொடர்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

தொடர்களில் இவருடைய நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்து உள்ளார். அவருக்கு கல்லீரலில் பிரச்சனை என்று தெரியவந்து உள்ளது. இதற்காக அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

-விளம்பரம்-
Image result for actor thilakan sons

இந்த நிலையில் நடிகர் ஷாஜிக்கு கல்லீரல் பிரச்சனை முற்றியது. மேலும், மருத்துவர்கள் அளித்த சிகிச்சையும் பலன் அளிக்கவில்லை. இதனையடுத்து இன்று காலை நடிகர் ஷாஜி உயிரிழந்தார். அவரது மறைவை அடுத்து மலையாளம் திரையுலகினரும், சின்னத்திரையில் சேர்ந்தவர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ஷாஜி அவர்களுக்கு இந்திரா என்ற மனைவியும் அபிராமி என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement