சாதாரணமா ஒரு Weightஅ தூக்குனா கூட மூஞ்சில கஷ்டம் தெரியும், ஆனா விஜய் சார் மூஞ்சில – பீஸ்ட் படம் குறித்து அந்த படத்தின் நடிகரே சொன்ன விஷயம்.

0
289
Beast
- Advertisement -

பீஸ்ட் திரைப்படம் குறித்து அந்த படத்தில் நடித்த நடிகரே கேலியாக பேசி இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். பொதுவாகி ஒரு ஹிட் படம் கொடுத்தால் அடுத்த படம் பிளாப் ஆகிவிடும் என்பது தான் விஜய்யின் சமீப கால ராசியாக இருந்து வருகிறது. மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார் விஜய். இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ்,யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-262-1024x637.jpg

பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தான் ஏற்ப்படுத்தி இருந்தது. படத்தில் தீவிரவாதிகளை ரொம்பவே வீக்காக காண்பித்தது, மிகவும் மோசமான கதை, மோசமான காமடி காட்சிகள் என்று படத்தில் ஏகப்பட்ட குறைகள் இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஒரு மாலை சுற்றியே இந்த படம் நடந்ததால் இந்த படத்தின் திரைக்கதையும் படு மோசமாக போனது.

- Advertisement -

பீஸ்ட் படம் வெளியான முதல் நாளே இந்த படத்தை பலரும் கேலி செய்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் கிளைமாக்சில் விஜய் Jet ஒட்டிய காட்சிகளை உண்மையான Jet வீரர்கள் காலய்த்து தள்ளியதால் இந்த படம் இந்திய அளவில் Troll படமாக அமைந்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நல்ல வில்லனாக நடித்த மலையாள நடிகர் Shine Tom Chacko இந்த படத்தை கலாய்த்து உள்ளார்.

This image has an empty alt attribute; its file name is 1-58-672x1024.jpg

பீஸ்ட் படத்தில் நடித்த மலையாள நடிகர் :

இந்த படத்தில் தீவிரவாத கும்பலில் ஒரு நல்லவராக நடித்து இருந்தார். இவர் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகராக உள்ளார். இவர் தமிழில் ஹரி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த வேங்கை திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் பீஸ்ட் படத்தை கேலியாக பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

விஜய் மூஞ்சில் அதை காட்டவில்லை :

அந்த பேட்டியில் பேசிய அவர், ஒரு காட்சியில் விஜய் என்னை கட்டி அழைத்து செல்வார். பொதுவாக யாரவது ஒரு வெயிட்டை தூக்கினால் கூட முகத்தில் கஷ்டம் தெரியும். ஆனால், விஜய் தன் முகத்தில் அப்படி எதையும் காட்டவில்லை. இதுக்கு விஜய் சாரை குறை சொல்ல முடியாது. படக்குழு தான் காரணம். நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை. ஆனால், இந்த படம் குறித்த கேலிகளை பார்த்தேன் ‘ என்று கூறியுள்ளார்.

பீஸ்ட் படத்தை இன்னும் பார்க்கவில்லை :

மேலும், தொகுப்பாளினி ‘பீஸ்ட் படம் உங்களுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல என்ட்ரி என்று நினைக்கிறீர்களா’ என்று கேட்க, அதற்கு பதில் அளித்த அவர் ‘பீஸ்ட் படமே தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல என்ட்ரி கிடையாது’ என்று கூறியுள்ளதாக ரசிகர்கள் சிலர் கமன்ட் செய்து வருகின்றனர். இது நாள் வரை பீஸ்ட் படத்தை மற்றவர்கள் தான் கேலி செய்து இருந்தனர். ஆனால், அந்த படத்தில் நடித்த நடிகரே இப்படி சொல்லி இருப்பது விஜய் ரசிகர்களை கொஞ்சம் கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

பீஸ்ட் படம் மட்டுமல்ல சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் இருந்து நெல்சனை பலரும் கேலி செய்து வருகின்றனர். இதை பார்க்க காஸ்டமாக இருக்கிறது என்று லோகேஷ் கனகராஜே பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். தற்போது நெல்சன், ரஜினியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பீஸ்ட் படத்தில் விட்டதை நெல்சன் கண்டிப்பாக பிடித்துவிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement