வெளிய வந்து பாத்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது – ரியோ வெளியிட்ட முதல் வீடியோ.

0
106999
rio
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

மற்ற சீசன்களைவிட இந்த சீசனில் தான் எக்கசக்க விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதிலும் ஷிவானி, ஆஜீத் ஆகியோரை எல்லாம் பொத்தி பொத்தி காப்பற்றியது பிக் பாஸ். இதில் ரியோவை பற்றி சொல்லவா வேண்டும். அதிலும் கடந்த வாரம் பல்வேறு விஜய் டிவி பிரபலங்களும் ரியோ கடைசி வார நாமினேஷனில் இருந்த போது அவரை இறுதி போட்டிக்கு அனுப்ப பல்வேறு விஜய் டிவி பிரபலங்களும் சமூக வலைதளத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார்கள். பலரும் ரியோவிற்கு 50 வாக்குகளை அளித்த ஸ்க்ரீன் ஷாட்டை கூட தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

- Advertisement -

அதே போல விஜய் டிவி பிரபலன்களான ரியோ, நிஷா, கேப்ரில்லா ஆகியோர் அர்ச்சனாவுடன் சேர்ந்து லவ் பேட் என்ற குழுவையும் ஆரம்பித்தனர். ஆனால், இந்த குழுவில் இருந்த யாரும் டாப் இரண்டு இடங்களை பிடிக்கவில்லை என்பது தான் சோகம். உண்மையில் இந்த சீசன் ஆரம்பித்த போது ரியோ மீது ரசிகர்களுக்கு பல எதிர்பார்புகள் இருந்தது. ஆனால், அர்ச்சனா உள்ளே நுழைந்த பின்னர் தான் ரியோவின் தனித்தன்மை முற்றிலும் மறைந்து போனது.

இதனாலேயே இவரது டைட்டில் கனவும் பாழாய் போனது. அதே போல பிக் பாஸ் நிறைவடைய சில நாட்கள் இருக்கும் நிலையில் தன்னுடைய ஜாலியான குணாதிசயத்தை மறந்து மிகவும் சோகமாக காணப்பட்டார் ரியோ. அதற்க்கு காரணம் கேட்டதற்கு தன்னுடைய வீட்டின் ஞாபகம் வந்துவிட்டதாக கூறி இருந்தார் இப்படி ஒரு நிலையில் ரியோ, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் முதன் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement