‘எனக்கு சினிமா சரிபட்டு வராது விட்ருங்க’ – 50 ஆண்டு சினிமா வாழ்க்கை, 600கும் மேற்பட்ட படங்கள். மகா நடிகையை இழந்து தவிக்கும் மலையாள திரையுலகம்

0
564
lalitha
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் லலிதா. இவர் காதலுக்கு மரியாதை, காற்று வெளியிடை, அலைபாயுதே, உள்ளம் கேட்குமே, கிரீடம், மாமனிதன் போன்ற உள்ளம் தமிழ் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் இயக்குனர் பரதனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. 1992ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் படத்தை இயக்கியவர் தான் பரதன். இவர் தமிழ் மொழியை விட அதிகம் மலையாள சினிமா உலகில் தான் நடித்திருக்கிறார். மேலும், இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா உலகில் படங்கள் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் காயாங்குளம் ராமபுரத்து கடய்க்கால் தறயில் அனந்தன் நாயர் – பார்கவி அம்மா ஆகியோருக்கு மகளாக 1947ல் பிறந்தவர்.

-விளம்பரம்-

இவருடைய உண்மையான பெயர் மகேஸ்வரி. பள்ளியில் படிக்கும்போதே இவருக்கு நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதனால் இவர் பல மேடைகளில் நடனமாடி அரங்கேற்றம் கூட செய்திருக்கிறார். பத்து வயதிலேயே இவர் கே.பி.ஏ.சி நாடக கம்பெனியில் சேர்ந்து பலி என்ற நாடகத்தில் நடித்தார். அதன் பிறகு தன்னுடைய பெயரை கே.பி.ஏ.சி லலிதா என மாற்றிக் கொண்டார். பிறகு இவர் குறுகிய காலத்திலேயே நாடகங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். அதன் பிறகு தான் இவருக்கு படங்களில் நடிக்க ஆர்வம் வந்தது.

- Advertisement -

லலிதா திரைப்பயணம்:

அப்படியே இவர் பல படங்களில் நடித்தார். இவர் தமிழ், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே லலிதா அவர்கள் 1978ல் இயக்குனர் பரதனை திருமணம் செய்து கொண்டார். மாதவிக்குட்டி, சக்கரவாகம், நீலக்கண்ணுகள் போன்ற சினிமாக்களில் ஒன்றாக பணிபுரிந்த போது இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு பரதன் தன் சினிமாக்களில்லலிதாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இப்படி இவர்களுடைய சந்தோஷமான வாழ்க்கையில் லலிதா கணவர் பரதன் உடல் நிலை குறைவு காரணமாக 1998 இல் காலமானார்.

சினிமாவில் லலிதாவின் ரீ-என்ட்ரி:

இவர் காலமானதை அடுத்து லலிதா சினிமாக்களில் சிறிது காலம் நடிக்காமல் இருந்தார். பின் சத்யன் அந்திக்காடு இயக்கிய ‘வீண்டும் சில வீட்டுகார்யம்’ என்ற சினிமா மூலம் லலிதா மீண்டும் நடிக்க வந்தார். அப்படியே இவர் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். மேலும், இவர் இரண்டு முறை துணை நடிகருக்கான தேசிய விருதையும், நான்கு முறை கேரள மாநில விருதும் வாங்கியிருக்கிறார். இவருடைய மகன் சித்தார்த் சினிமா உலகில் இயக்குனராகவும் நடிகராகவும் இருக்கிறார். இவருக்கு ஸ்ரீ குட்டி என்ற மகளும் உண்டு.

-விளம்பரம்-

பழம்பெரும் நடிகை லலிதா இறப்பு:

பின் லலிதா 2016 ஆம் ஆண்டு கேரள சங்கீத நாடக அகாடமியின் தலைவராக இருந்தார். கேரள சங்கீத நாடக அகாடமியின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை இவருக்கு தான் சேரும். சமீபத்தில் இவர் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருந்தார். அவரது மருத்துவ செலவு மொத்தத்தையும் கேரள அரசு ஏற்றுக் கொண்டது. இந்த சூழ்நிலையில் லலிதாவுக்கு கல்லீரல் ப்ரச்சனை ஏற்பட்டது. பின் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சையிலிருந்த லலிதா சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள தன்னுடைய மகன் சித்தார்த்தின் வீட்டில் மரணமடைந்தார்.

லலிதா இழப்பிற்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்:

இவர் தன்னுடைய 74-வது வயதில் உயிர் இழந்து உள்ளார் . மேலும், அவரது உடல் கொச்சியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் திருச்சூர் சங்கீத நாடக அகாடமியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின் அரசு மரியாதையுடன் வடக்காஞ்சேரியில் உள்ள அவரது வீட்டின் அருகே நேற்று மாலை 6 மணியளவில் லலிதாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. லலிதாவின் இறப்புக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்தனர். தற்போது நடிகை லலிதாவை இழந்து மலையாள திரையுலகம் தவிக்கிறது.

Advertisement