லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது தென்னிந்திய சினிமாவில் முடி சூட முன்னணி நடிகையாக திகழ்ந்த வருகிறார். அதிலும் தமிழ் சினிமாவில் மட்டும் இவருக்கு ஒரு தனி சிறப்பான இடம் கிடைத்துள்ளது. இவர் வாங்கும் சம்பளம் சில வளர்ந்து வரும் ஹீரோக்களை விட அதிகம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் கதாநாயகிகள் சிலர் மீட்டிங் ஒன்றில் ஒன்றாக பங்கேற்றனர். அந்த கூட்டத்தின் முடிவில் கதாநாயகிகள் சினிமாவில் சுரண்டப்படுகிறார்கள் அவர்களும் ஹீரோக்களுக்கு இணையாக நடத்தபட வேண்டும் என்று வலியுறுத்தபட்டது.
இதையும் படியுங்க : அவர் மட்டும் தான் நாட்டுபுற பாடகரா.! குப்புசாமிக்கு நேரடி பதிலடி கொடுத்த செந்தில் கணேஷ்.!
இது குறித்து பிரபல மலையாள நடிகர் சீனுவாசன் பேசுகையில், ஆணும் பெண்ணும் இங்கே சமமாகவே பார்க்கப்படுகிறார்கள். சம்பளம் பற்றி பேசுகிறார்கள். ஹீரோக்கள் உள்ளிட்ட நடிகர்களுக்கு மட்டுமே அதிக சம்பளம் கொடுப்பதாகக் கூறப்படுவதை ஏற்க மாட்டேன். மார்க்கெட் மதிப்பை பொறுத்தே நடிகர், நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. இங்கே எத்தனை நடிகர்கள், நயன்தாராவை போல சம்பளம் வாங்குகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மலையாள நடிகரான சீனு வாசன், மலையாளத்தில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பல ஹிட் படங்களுக்கு கதை எழுதி யுள்ளார். இவர், தமிழில், லேசா லேசா, புள்ளக்குட்டிகாரன் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், தற்போது உடல் நலம் தேறியுள்ளார்