அவர் மட்டும் தான் நாட்டுபுற பாடகரா.! குப்புசாமிக்கு நேரடி பதிலடி கொடுத்த செந்தில் கணேஷ்.!

0
959
Kuppusamy
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பாடகர்களான செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியனரையும், விஜய் டிவியையும் கடுமையாக தாக்கி பேசி இருந்தார் பிரபல நாட்டுபுற பாடகரான புஷ்பவனம் குப்புசாமி. நாட்டு புற பாடல்களில் செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மியை விட புஷ்பவனம் குப்புசாமி சூப்பர் சீனியர்.

-விளம்பரம்-
Image result for senthil ganesh kuppusamy

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற புஷ்பவனம் குப்புசாமி, பேசுவது எல்லாம் இரட்டை அர்த்தம், ஆபாசம்.. மக்கள் இசை கலைஞன் என ஒருவர் பாடுகிறான். மேடை முழுவதும் மனைவியை பக்கத்தில் வைத்துகொன்டே வேறு ஒரு பெண்ணிடம் அசிங்கமாக சைகை செய்கிறான். யூடியூப்பில் பார்த்து நொந்துபோனேன்.

இதையும் படியுங்க : பாப் கட், சிகப்பு நிற சீருடை.! கசிந்தது விஜய் 63-ல் இந்துஜாவின் லுக்.! 

- Advertisement -

இவர்களை பார்க்கும்போது இந்த துறையில் நாமும் இருக்க வேண்டுமா? பேசாமல் பாடுவதை நிறுத்திவிடலாமா என்று கூட யோசிக்கிறேன் என்று கடுமையாக பேசி இருந்தார். தற்போது புஷ்பவனம் குப்புசாமியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ளார் செந்தில் கணேஷ்.

Image result for senthil ganesh

சமீபத்தில் செந்தில் கணேஷ் பேசுகையில், பாடல்களில் இரட்டை அர்த்தம் இல்லாத பாடல்கள் எங்கே இருக்கிறது. நாங்களும் எங்கள் மூத்த கலைஞர்கள் எழுதிய பாடல்களை நாங்க பாடியுள்ளோம். அவ்வாறு பாடும் போது அதில் ஆபாச வார்த்தைகள் இருந்தால் நாங்கள் அதனை மாற்றி பாடி விடுவோம்.

-விளம்பரம்-

ஒரு பழ மொழி சொல்லுவாங்க ஆகாதவன் பொண்டாட்டிக்கு கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் அப்படி தான் இருக்கிறது அவரது பேச்சு. அவர் மற்றும் தான் நாட்டுபுற பாடகரா? நாங்கள் எங்கள் பகுதியில் கற்றுக்கொண்ட பாடலை தான் நான் பாடுகிறேன். இதில் இரட்டை அர்த்தம் எங்கும் கிடையாது, யாரையும் நான் தொட்டு கூட பாடுவது இல்லை. எங்கள் மக்களுக்காக நாங்கள் படுகிறோம் அவ்வளவுதான் என்று பேசியுள்ளார் செந்தில் கணேஷ்.

Advertisement