மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் மகளை குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான பின்னணி பாடகராகவும், நடிகராகவும் திகழ்ந்தவர் மலேசியா வாசுதேவன். இவர் பாடகர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.
இவர் அதிகம் இசைஞானி இளையராஜாவிற்கு தான் அதிகமான பாடல்களை பாடி இருந்தார். கடந்த 2003 ஆம் ஆண்டு இவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. அதன் பிறகு இவர் பெரிதாக படங்களில் பாடாமல், நடிக்காமல் இருந்தார். அதற்குப்பின் கடந்த 2011 ஆம் ஆண்டு உடல்நிலை குறைவால் மலேசியா வாசுதேவன் காலமானார். இவரின் இறப்பு தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு என்று சொல்லலாம்.
மலேசியா வாசுதேவன் குடும்பம்:
மேலும், இவருக்கு யுகேந்திரன், பிரசாந்தினி, பவித்ரா என்ற மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். இதில் வாசுதேவன் மகன் யுகேந்திரன் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் இதுவரை 600-க்கும் பாடல்களை பாடி இருக்கிறார். தன் தந்தையை போல் இவரும் மிக சிறந்த பாடகர். அதோடு இவர் சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
யுகேந்திரன் குறித்த தகவல்:
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் யுகேந்திரன் நடித்திருக்கிறார். அதேபோல் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேட்டையன்’ படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ என்ற பாடலில் வாசுதேவனின் குரலை ஏஐ தொழில்நுட்ப மூலம் அனிருத் பயன்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மலேசியா வாசுதேவனின் மகள் பிரசாந்தினி குறித்து பலருக்கும் தெரியாத சில விஷயங்களை தான் இங்கு பார்க்க போகிறோம்.
ப்ரசாந்தினி குறித்த தகவல்:
இவரும் ஒரு மிகச்சிறந்த பாடகி. தமிழ் சினிமாவில் இவர் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். பிரசாந்தினியும் தன்னுடைய அண்ணன் யுகேந்திரனை போல திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகிவிட்டார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு பிரேம்நாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளிவந்த 12b என்ற படத்தில் இடம் பெற்ற ‘லவ் பண்ணு’ என்ற பாடலின் மூலம் தான் பாடகியாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.
ஹிட் சாங்ஸ்:
முதல் பாடலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனை அடுத்து இவர் பிரசாந்தின் வின்னர் படத்தில் வந்த கோழி கொக்கர கோழி, வாரணம் ஆயிரம் படத்தில் முன்தினம் பார்த்தேனே, அயன் படத்தில் விழி மூடி யோசித்தால், ஆடுகளம் படத்தில் அய்ய்யோ நெஞ்சு போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். கடைசியாக இவர் தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மகா மகா என்ற படத்தில் பாடியிருந்தார். அதற்குப் பிறகு இவர் பெரிதாக சினிமாவில் கவனம் செலுத்தவில்லை. இருந்தாலும் அவ்வபோது இவர் கச்சேரிகளில் பாடி வருகிறார்.