பிக் பாஸ் 7ல் கலந்துகொண்டுள்ள பிரபல பின்னணி பாடகரின் வாரிசு – எத்தன வருஷம் ஆச்சி இவர பாத்து

0
1914
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் எக்ஸ்க்ளூசிவ் பட்டியல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். ல் தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது. முதல் சீசனை தொடர்ந்து தற்போது ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக துடங்கியது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பிரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அந்த வகையில் பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் வாரிசும் கலந்துகொண்டுள்ளார். மிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான பின்னணி பாடகராகவும், நடிகராகவும் திகழ்ந்தவர் மலேசியா வாசுதேவன்.

- Advertisement -

இவர் என்பது ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இவர் முதலில் மலேசியாவில் தான் பல நாடகங்களில் நடித்தார். அந்த அனுபவத்தை வைத்து தான் இவர் ரத்த பேய் என்ற படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார். இவருக்கு யுகேந்திரன், பிரசாந்தினி, பவித்ரா என்ற மூன்று பிள்ளைகள் உள்ளார்கள்.

இந்நிலையில் மலேசியா வாசுதேவனின் குடும்ப புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்து பலரும் இவர் தானா மலேசியா வாசுதேவனின் மகன் என்று ஆச்சரியப்பட்டு வியந்து போய் உள்ளார்கள். அவர் வேற யாரும் இல்லைங்க நடிகர் யுகேந்திரன் தான். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் யுகேந்திரனும் ஒருவர்.

-விளம்பரம்-

இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் இதுவரை 600-க்கும் பாடல்களை பாடியுள்ளார். தன் தந்தையை போல் இவரும் மிக சிறந்த பாடகர். அதிலும் இவர் சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் என்பது குறிபிடத்தக்கது. இவர் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் தளபதி விஜயுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார். இறுதியாக மாஸ்டர் மகேந்திரன் நடித்த ‘விழா’ படத்தில் நடித்திருந்தார். ஆனால், சமீப காலமாக இவர் படங்களில் நடிப்பதை நிறுத்துவிட்டார். மேலும், இவரது மனைவி வெறும் யாரும் இல்லை பிரபல தொகுப்பாளினியான மாலினி தான்.

Advertisement