சூப்பர் டீலக்ஸ் சில்பானு நெனச்சிட்டேன் – குஷ்பூவை கேலி செய்தவருக்கு அவர் கொடுத்த பதிலடி.

0
717
kushboo
- Advertisement -

‘காங்கிரஸ் கட்சி 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மிகவும் மோசமான நிலையில் தோற்றபோது கட்சியில் சேர்ந்தவள் நான். பணத்துக்காகவோ புகழுக்காகவோ நான் கட்சியில் சேரவில்லை.களத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு தலைமையில் இருப்பவர்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள். உண்மையாக விரும்பும் என்னை போன்ற வரை உயர் பதவியில் இருப்பவர்கள் ஓடுகின்றனர்.நீண்ட யோசனைக்கு பின்னரே நான் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறேன் இதனுடன் நான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கூட விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தையும் இணைத்திருக்கிறேன் என்று குஷ்பூ கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார் குஷ்பூ.

-விளம்பரம்-

எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த ராகுல் காந்தி ஜி அவர்களுக்கும் கட்சியில் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய தனிப்பட்ட நன்றிகளை இதன் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் மீது இருக்கும் மரியாதை எப்போதும் மாறாது என்று கூறியிருந்தார். அதன் பின்னர் ட்வீட் ஒன்றை போட்டிருந்தார் குஷ்பூ,’ பலர் என்னிடம் ஒரு மாற்றத்தை பார்க்கின்றனர். வயதிற்கு ஏற்ப நமது வளர்ச்சியும் மாற்றமும் இருக்கும். கற்றவை மற்றும் கற்காதவை, உணர்வுகளின் மாற்றம், பிடித்தவை மற்றும் பிடிக்காதவை, எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் ஆகியவை ஒரு புதிய வடிவத்தை கொடுக்கும்.

- Advertisement -

கனவுகள் புதியவை. லைக்குக்கும் லவ்வுக்கும் வித்தியாசம் இருப்பதை போல, சரிக்கும் தவறுக்கும் வித்தியாசம் இருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. மாற்றம் தவிர்க்க முடியாதது என்று பதிவிட்டு இருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பா ஜ கவில் சேர்ந்த குஷ்பூவிற்கு, வரும் சட்டமன்ற தேர்தலில் சீட்டும் வழங்கப்பட்டு உள்ளது. நடிகை குஷ்பூ, பா ஜ க சார்பாக சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் போட்டியிடுகிறார்.

இத்னால் ஆயிரம் விளக்குப்பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் குஷ்பூ. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் பிரச்சாரத்தை முடித்துவிட்டு புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்திற்கு கீழ் நெட்டிசன் ஒருவர் ‘நான் திடீர்னு சூப்பர் டீலக்ஸ் ஷில்பானு நெனச்சிட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சது குஷ்பூன்னு’என்று கேலி செய்தார். அதற்கு பதில் அளித்த குஷ்பூ, சிறப்பு, அது விஜய் சேதுபதிக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்து இருக்கிறது. திருநங்கைகளை கேலி செய்வதை நிறுத்துங்க. அவர்களும் நமக்கு இணையானவர்கள் தான் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement