தி கேரளா ஸ்டோரி படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்த நபர் மீது சராமாரி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தி கேரளா ஸ்டோரி. இந்த படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்தானி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தை விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்து இருக்கிறார்.
இந்த படம் இந்தியில் உருவாகி பேன் இந்திய படமாக தற்போது வெளியாகி இருக்கிறது. படத்தில் கேரளாவில் அல்லா தான் உலகத்திலேயே உயர்ந்த கடவுள் என்றும் ஹிஜாப் அணிந்து கொண்டால் யாரும் பாலியல் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்றும் கல்லூரி ஹாஸ்டலில் இருக்கும் இந்து-கிறிஸ்தவ மாணவிகளை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுகிறார்கள். பின் அவர்களை இஸ்லாமிய இளைஞர்கள் மூலம் காதலிக்க வைத்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.
தி கேரளா ஸ்டோரி படம்:
திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த பெண்களை சிரியா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளாவும், பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்துகிறார்கள். இறுதியில் அவர்கள் மதவெறியில் இருந்து விடுவிக்கப்பட்டார்களா? அந்த பெண்களுக்கு விடுதலை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக பல எதிர்ப்புகள் நிலவியது.
குவிந்த எதிர்ப்புகள் :
அதோடு இது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தார்கள். ஆனால், விதிக்கப்பட்ட தடைகள் எல்லாம் மீறி இந்த படம் வெளியாகியிருந்தது. அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் இந்த படம் வெளியான திரையரங்குகள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
பரிசத் அமைப்பு உறுப்பினர் :
மேலும், வெளியான முதல் நாளிலேயே இந்தியா முழுவதும் இந்த படம் 10 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் படம் குறித்து விமர்சனம் செய்த நபரை சிலர் சாராமாறியாக தாக்கி இருக்கும் சம்பவம் சோசியல் மீடியாவில் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, ராஜஸ்தான் ஜோத்பூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்வ ஹிந்து அமைப்பின் உறுப்பினரான நபர் தி கேரளா ஸ்டோரி படம் வந்தபோது இவர் பொதுமக்கள், குறிப்பாக இளம் பெண்கள் பார்க்க வேண்டும் என்று சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.
வீடு புகுந்து தாக்குதல் :
இதை அடுத்து கடந்த சனிக்கிழமை இரவு இவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது மூன்று நபர்கள் இவரை தாக்கியது மட்டும் இல்லாமல் கொன்று விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். போலீசார் விசாரணை நடத்தி இருக்கிறது. அப்போது ஒரு சிறுவன் உட்பட மூன்று பேர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். தற்போது இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.