விஜய் 63 படப்பிடிப்பு தளத்தில் விபத்து.! தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.!

0
170
Vijay63

இயக்குனர் அட்லீ தற்போது, விஜய் நடித்து வரும் 63 ஆவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகி பாபு, கதிர், இந்துஜா உட்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பூந்தமல்லியில் நடந்து வருகிறது. அதில் 100 அடி உயரத்திற்கு மேல் பொருத்தப்பட்டிருந்த போக்கஸ் லைட் ஒன்று தவறி விழுந்தது.

அந்த விபத்தில் செல்வராஜ் என்னும் எலக்ட்ரீசியன் படுகாயமடைந்தார்.
இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் படக்குழுவினர் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர்.