அஜித் ‘ஊ சொல்றியா மாமா’ பாட்டுக்கு ஆடினாரா ? சமந்தா பகிர்ந்த வீடியோவால் குழம்பிய ரசிகர்கள்.

0
583
- Advertisement -

தென்னிந்திய திரை உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீப காலமாக இவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். பின் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

சமந்தாவின் முதல் ஐட்டம் பாடல் :

இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முறையாக ‘புஷ்பா’ படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடிஇருந்தார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாநடித்து இருந்தார். பகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாகநடித்து இருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது.

- Advertisement -

சூப்பர் ஹிட் அடித்த பாடல் :

மேலும், இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துஇருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாயா சாமி ‘ பாடலை விட சமந்தா ஆடிய ‘ஹ்ம் சொல்றியா’ பாடல் தான் பெரும் வரவேற்பை பெற்றுஇருந்தது. இந்த ஒரு பாடலில் ஆட நடிகை சமந்தாவிற்கு 1.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும், திரையரங்கில் இந்த பாடலை ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்டு வந்தனர்.

பாடலின் வரவேற்பும் சர்ச்சையும் :

எந்த அளவிற்கு இந்த பாடல் வரவேற்பை பெற்றதோ அதே அளவு இந்த பாடல் சர்ச்சியிலும் சிக்கி இருக்கிறது. ஆந்திராவை சேர்ந்த ஆண்களுக்கான அமைப்பு ஒன்று புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய அந்த பாடலை தடை செய்ய வேண்டும் என வழக்குதொடர்ந்தனர். பின் அவர்கள் அளித்த மனுவில் அந்த பாடலில் ஆண்கள் தவறான எண்ணம் கொண்டவர்கள் என்று கூறப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். ஆனாலும், இந்த பாடலுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

-விளம்பரம்-

சமந்தா பகிர்ந்த வீடியோவால் குழம்பிய ரசிகர்கள் :

இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற தன்னுடைய ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு திருமணத்தில் சிலர் நடனமாடி இருக்கின்றனர். இந்த வீடியோவை கண்ட சமந்தாவின் பாலோவர்கள் பலரும் இது என்ன அஜித்தா? என்று கேட்டு வருகின்றனர். அதற்கு காரணம் அந்த நபர் பார்பதர்க்கு அச்சு அசலாக அஜித் போலவே இருக்கிறார்.

அடுத்தடுத்து படங்களில் சமந்தா :

விவாகரத்துக்கு பின்னர் நடிகை சமந்தா அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்துள்ளார். அதே போல தெலுங்கில் யசோதா, சாகுந்தலம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதே போல ஒரு இந்தி படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement