1 லட்சம் கொடுத்து டேட்டிங் அழைத்த நபர்.! ஆதாரத்தை வெளியிட்ட ஷாலு ஷம்மு.!

0
3205
Shalu-Shammu
- Advertisement -

கடந்த சில வாரங்களாக இளசுகள் மத்தியில் சென்சேனாக இருந்து வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீவிதாவுடன்  படம் முழுவதும் தோழியாக நடித்தவர் தான் ஷாலு சம்மு.  

-விளம்பரம்-

அந்த படத்தில் கிராமத்து லுக்கில் இறுந்த இவர், நேரில் படு மாடன் மங்கையாக இருந்து வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : இறுதியில் சீரியலுக்கு நடிக்க வந்துள்ள ஸ்ருதி ஹாசன்.! நிலைமை இப்படி ஆகிடிச்சே.! 

- Advertisement -

சமீபத்தில் இவர் சில ஆண் நண்பர்களுடன் நடனமாடும் வீடியோ ஒன்று வெளியானது அதன் பின்னர் அம்மணி சமூக வலைதளத்தில் படு பேமஸ் ஆகிவிட்டார். சமீபத்தில் இவரிடம் இன்ஸ்டாகிராமில் ஒருவர் விளம்பரபடத்தில் நடிக்க சம்மதம் கேட்டுள்ளார்.

ஒரு விளம்பரத்திற்கு 50 ஆயிரம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். அதன் பின்னர் 1 லட்சம் தருகிறேன் என்னுடன் டேட்டிங் வருகிறீர்களா என்று அந்த நபர் ஷாலுவை தொடர்ந்து தொல்லை செய்துள்ளார். அந்த நபர் அனுப்பிய மெசேஜ்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
வேடிக்கை உலகம்:

ஏற்கனவே, தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிப்பதற்காக தன்னை ஒருவர் படுக்கைக்கு அழைத்தாகவும், அதனை வெளியில் சொன்னால் எந்த பயனும் இல்லை என்பதால் அதனை நான் சொல்லவில்லை என்றும் ஷாலு ஷம்மு கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement