உலகநாயகன் கமல் மகள் ஸ்ருதி ஹாசன் தமிழில் பாடகியாக அறிமுகமானார். அதன் பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் ஸ்ருதி. ஆனால், சுருதி ஹாசன் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருந்து வந்தாலும் இவர் அறிமுகமானது என்னவோ இந்தியில் தான். இந்தியில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெளியான லக் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே பிகினி உடையில் தோன்றி ஷாக் கொடுத்தார் ஸ்ருதி.
இதையும் பாருங்க : இணையத்தில் வெளியான தளபதி 63 யின் பர்ஸ்ட் லுக்.! ரசிகர்கள் ஷாக்.!
தொடர்ந்து தமிழில் விஜய், அஜித், சூர்யா என அணைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஒரு ரௌண்டு வந்தார். அது மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்ந்து வந்தார். ஆனால், சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார்.
இவர் தந்தை நடித்து வந்த பல்ராம் நாயுடு படமும் கைவிட பட தற்போது பட வாய்ப்புகளுக்காக அலைந்து கொண்டிருக்கிறார் அம்மணி . இந்த நிலையில் இவருக்கு சீரியல் கைகொடுத்துள்ளது. அதுவும் தமிழ் சீரியல் இல்லைங்க ஹாலிவுட் சீரியல்.
ஸ்ருதி ஹாசன் தற்போது அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ள “ டிரெட்ஸ்டோன் ” சீரியலில் நடிக்க உள்ளார். அந்த சீரியலின் ஸ்ருதி ஹாசன் நீரா படெல் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியலில் அவர் டெல்லியில் ஒரு ஹோட்டலில் பணியாளராக வேலைசெய்யும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்தத் தொடரின் படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.