சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஒட்டுமொத்த உலகமும் தம்பித்து போய் உள்ளது. இதுவரை இந்தியாவில் 1024 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் மற்றும் 24 பேர் உயிர் இழந்து உள்ளார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

ஊரடங்கு உத்தரவினால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்னரே நபர் ஒருவர் சோசியல் மீடியாவில் இந்த கொரோனா வைரஸ் வரப்போகிறது என்று பகிர்ந்து உள்ளார். தற்போது அந்த ட்வீட் காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது. 2013 ஆம் ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி மேக்ரோ என்ற பெயரில் டுவிட்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : அட, தனுஷா இது ? இதுவரை வெளிவராத புகைப்படத்தை வெளியிட்ட ஷெரின்.

Advertisement

அதில் கொரோனா வைரஸ் கம்மிங் என்று கருத்து பதிவிடப்பட்டு உள்ளது. இந்த ட்விட்டை ஆண்ட்ராய்ட்டு மூலம் காலை 9 மணி அளவில் போடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. தற்போது இந்த ட்விட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த ட்விட் குறித்து பல கேள்விகள், கருத்துக்கள் சோசியல் மீடியாவில் வந்து கொண்டு இருக்கின்றனர்.

அந்த வகையில் இதை பார்த்த நெட்டிசன் ஒருவர் கூறியிருப்பது, அவர் எங்களை எவ்வளவோ எச்சரிக்க முயன்றார். ஆனால், நாங்கள் கேட்கவில்லை என்று கூறினார். மேலும், மற்றொருவர் கூறியிருப்பது, அவர் எதிர்காலத்தை கணித்து குறிப்பவர் ஆக கூட இருக்கலாம் என்றும் கூறி வருகிறார்கள். இந்த ட்வீட்டை பார்த்த பலர் கிண்டலும் கேலியும் செய்து இருக்கிறார்கள்.

Advertisement

இப்படி ஏழு வருடங்களுக்கு கழித்து உலகையே ஆட்டி கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸ் குறித்து மார்கோ எப்படி கவனித்தார் என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், த்ரில்லர் நாவல் ஐஸ் ஆப் டார்க்னஸ் என்ற புத்தகத்தை 1971 ஆம் ஆண்டு Dean Koontz என்பவர் எழுதி இருக்கிறார். இதில் அவர் Wuhan-400 என்ற வைரஸ் குறித்தும், வைரஸினால் உருவாகும் பிரச்சனைகள் குறித்தும் கூறியிருக்கிறார்.

Advertisement

இதில் சீனா ராணுவம் உருவாக்கிய வைரஸ் (biological) குறித்தும் சொல்லப்படுகிறது. இதனால் மக்கள் எல்லாரும் இது சீனாக்காரன் பண்ண வேலையாக இருக்குமோ?? என்று பல சந்தேகத்துடன் கேள்விகளை எழுப்புகின்றனர். ஏழாம் அறிவு படத்தில் காண்பிக்கப்பட்ட மாதிரி நிஜமாகவே நடக்கிறதா?? என்றும் குழம்பிப்போய் உள்ளார்கள்.

கொரோனா வைரஸை ஒழிக்க உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் யாரும் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளே பத்திரமாக இருக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது.

Advertisement