“அழகிய அசுரா, அழகிய அசுரா” என்ற பாடலின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை ஷெரின். இவர் முதலில் வடிவழகியாக இருந்து தான் நடிகையானார். இவர் தனது 16 வயதில் தர்ஷன் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். பின் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.
ஷெரின் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் பல்வேறு படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஷெரின் கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான நண்பேன்டா என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதற்கு பிறகு இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் அமையவில்லை. கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதிலும் இவர் பைனல் போட்டியாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஷெரின் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதேபோல நடிகை ஷெரீனுக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் உடல் பருமனாக மாறி இருந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் உடல் எடை குறைந்து இளமையான தோற்றத்துக்கு திரும்பினார். இந்த நிலையில் நடிகை ஷெரின் அவர்கள் தனது சோசியல் மீடியாவில் துள்ளுவதோ இளமை படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி இளசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை ஷெரின். 2002 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது துள்ளுவதோ இளமை படம். இந்த படத்தில் தனுஷ், ஷெரின், அபிநய்,ரமேஷ் கண்ணா,தலைவாசல் விஜய்,விஜயகுமார், ஷில்பா போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
இப்படத்தை. மேலும், இயக்குனர் செல்வராகவன் திரைக்கதை எழுதிய இப்படம் தான் தனுஷின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை ஷெரின் அவர்கள் இந்த படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இது நம்ம ஷெரினா! என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.