தமிழ் சினிமா உலகில் 80பது கால கட்டங்களில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. இவர் முதன் முதலாக 1980களில் தான் தன்னுடைய திரைப்பட பயணத்தைத் தொடங்கினார். பின் நடிகை குஷ்பூ அவர்கள் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். குஷ்புவின் மீது உள்ள அன்பினால் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டினார்கள் அவரின் ரசிகர்கள். தற்போது இவர் சின்னத்திரை,வெள்ளித்திரை என துறைகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.
https://twitter.com/khushsundar/status/1290921183454494721
இவர் தமிழ் சினிமா திரை உலகில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்க்குமார், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து உள்ளார். நடிகை குஷ்பு திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். அதே போல இவர் தீவிர காங்கிரஸ் கட்சியின் தொண்டர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இதனாலேயே இவனுக்கும் பி ஜே பி ஆதரவாளர்களுக்கும் அடிக்கடி சமூக வலைதளத்தில் பனிப்போர் கூட நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இப்படி ஒரு நிலையில் நடிகை குஷ்புவிற்கு அடிக்கடி ஒரு நம்பரில் இருந்து மிரட்டல் அழைப்பு வருகிறதாம். கொல்கத்தாவில் இருந்து வரும் அந்த போன் நம்பரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பூ, எனக்கு இந்த நம்பரில் இருந்து கற்பழித்து விடுவதாக அடிக்கடி மிரட்டல் வருகிறது. மேலும், அந்த நம்பருக்கு சொந்தக்காரரின் பெயர் சஞ்சய் சர்மா என்றும் அந்த அழைப்பு கொல்கத்தாவில் இருந்து வருவது போல காண்பிக்கிறது. எனவே, கொல்கத்தா போலீசார் இதை கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் குஷ்பூ.
https://twitter.com/khushsundar/status/1290921797479628801
அதே போல, எனக்கு போன் செய்யும் அந்த நபர் நான் முஸ்லீம் என்பதால் கற்பழிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். பிரதமர் மோடி இதை கொஞ்சம் பாருங்க, இது தான் ராமரின் பூமியா என்பதை நீங்களே சொல்லுங்கள் என்று கூறி பிரதமர் மோடியையும் டேக் செய்து இருக்கிறார்.இது ஒருபுறம் இருக்க நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் நடிக்க உள்ள குஷ்பூ, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.





