கணவர் இறந்து ஓராண்டு கூட ஆகல அதுக்குள்ள இப்படியா – மன்மதன் பட நடிகை பதிவிட்ட புகைப்படத்தால் திட்டி தீர்த்த நெட்டிசன்கள்.

0
172
mandira
- Advertisement -

கணவர் இறந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் மந்திரா பேடி செய்த செயலை நெட்டிசன்கள் கண்டித்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் மந்திரா பேடி. இவர் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த சாந்தி என்ற தொடரின் மூலம் தான் மக்கள் மத்தியில் பரீட்சயமாகி இருந்தார். இதனை அடுத்து இவர் பல தொடர்களில் நடித்திருந்தார். அதன்மூலம் தான் இவருக்கு சினிமாவில் படவாய்ப்புகள் கிடைத்திருந்தது. மேலும், மந்திரா பேடி அவர்கள் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

சினிமாவில் கொஞ்சம் படங்கள் மட்டுமே நடித்தருந்தாலும் இவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட் படங்கள் என்று கூறப்படுகிறது. தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் மந்திரா பேடி ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறார். மேலும், இவர் தொகுப்பாளர், பேஷன் டிசைனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழில் சிம்புவின் மன்மதன் திரைப்படத்திலும் இவர் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மந்திரா பேடி பற்றிய தகவல்:

இதனிடையே நடிகை மந்த்ரா பேடி அவர்கள் 1999ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ராஜ் கவுஷலை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். இந்த தம்பதியினருக்கு வீர் மற்றும் தாரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவருடைய கணவர் ராஜ் கவுஷல் மாரடைப்பால் உயிரிழந்தார். தன் கணவரின் இறப்பை தாங்க முடியாமல் மந்திரா பேடி தவித்து போய் இருந்தார். மேலும், ராஜ் கவுஷல் மறைவினால் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது.

மந்திரா கணவர் மரணம்:

அதுமட்டுமில்லாமல் திரையுலகமும், ரசிகர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். இறுதி சடங்கை சடங்கின்போது மந்திரா பேடி கதறி அழுது இருந்தார். அதுமட்டும் இல்லாமல் தன்னுடைய கணவரின் இறுதி சடங்குகளை மரபுகளை உடைத்து மந்திரா பேடி செய்திருந்தார். பாரம்பரிய இந்து முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு இருந்தது. இருந்தாலும் தகன சடங்கின்போது உடைக்கப்படும் மண்பானை வழக்கமாக ஆண்களால் தகன மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

-விளம்பரம்-

மரபுகளை உடைத்த மந்திரா:

இந்த மரபுகளை உடைத்து மண்பானைகளை எடுத்துச் செல்வது உள்ளிட்ட அனைத்து இறுதிச் சடங்குகளையும் மந்திரா பேடியே தன்னுடைய கணவருக்காக முன்னின்று செய்து இருந்தார். இது சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. மேலும், தன் கணவரின் மரணம் பெரும் இழப்பாக இருந்த நிலையில் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மந்திரா பேடி இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். இந்த நிலையில் இவர் இணையத்தில் பகிர்ந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தாறுமாறாக விலகி இருக்கின்றனர்.

மந்திராவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

அது என்னவென்றால், மந்திரா பேடி தனது ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டிருக்கிறார். அந்த புகைப்படத்தை தான் இவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். தன்னுடைய கணவர் இறந்து ஓராண்டு கூட முடியாத நிலையில் மந்திரா பேடி தன்னுடைய ஆண் நண்பருடன் மிக நெருக்கமாக நின்று போஸ் கொடுத்திருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும், கணவனை புதைத்த இடத்தில் இன்னும் புல்லு கூட முளைக்கல அதுக்குள்ள இந்த ஆட்டம் தேவையா? என்று பயங்கரமாக விமர்சித்து கமெண்டுகளை போட்டனர். இதனால் தன் கமன்ட் பகுதியையே ஆப் செய்துவிட்டார் மந்திரா பேடி.

Advertisement