லோகேஷை நான் அவமானப்படுத்தினேனா? – விளக்கம் கொடுத்த ஜெய்பீம் மணிகண்டன்

0
660
Manikandan
- Advertisement -

லோகேஷ் கனகராஜை அவமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மணிகண்டன் கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தும், வசூலிலும் பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறது. இவர் “மாநகரம்” என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் கார்த்தி நடிப்பில் “கைதி” படத்தை இயக்கி இருந்தார். அதற்கு பிறகு விஜய்யின் மாஸ்டர், கமலின் விக்ரம் என பெரிய நடிகர்களை வைத்து பிரம்மாண்ட அளவில் படம் எடுத்து இருந்தார் லோகேஷ். இந்த படங்களும் மிக பெரிய அளவில் சாதனை படைத்து இருந்தது. மேலும்,விக்ரம் படம் வசூலில் கோடிகளை அள்ளி குவித்து இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார்.

- Advertisement -

லோகேஷ் திரைப்பயணம்:

இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். மேலும், படப்பிடிப்பு பலர் தொடங்கி சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க. லோகேஷ் கனகராஜ் அவர்கள் உலகநாயகன் கமலஹாசனின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

கமலின் தீவிர ரசிகர்:

அதுமட்டுமில்லாமல் லோகேஷ் குருவே கமல் தான். சிறுவயதிலிருந்தே கமல்ஹாசன் உடைய படங்களை பார்த்து தான் லோகேஷ் வளர்ந்தாராம். பின் கமலஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தை லோகேஷ் இயக்க இருப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது தள்ளிப் போனது. அதன் பின் கமலஹாசனை வைத்து லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் விக்ரம். இந்த படம் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியையும் வசூலையும் தந்திருந்தது.

-விளம்பரம்-

மணிகண்டன் சொன்னது:

இந்த நிலையில் சமீபத்தில் விகடன் பத்திரிக்கையில் லோகேஷுக்கு விருது அளித்திருந்தது. அதற்கு முன்னதாகவே நடிகர் மணிகண்டனுக்கும் விருது வழங்கியிருந்தார்கள். அந்த விருதை மணிகண்டனுக்கு கமல் வழங்கியிருந்தார். அப்போது மேடையில் மணிகண்டன், நான் உங்களுடைய ரசிகர். லோகேஷ் உங்களுடைய ரசிகர் என்று சொல்லும்போதெல்லாம் எனக்கு கோபம் வரும். அப்போது எல்லாம் அவரை அடித்து விட வேண்டும் என்றெல்லாம் நினைப்பேன். கமலின் ரசிகன் என்ற பட்டத்தை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

லோகேஷ் கொடுத்த பதில்:

இதை லோகேஷ் கீழே அமர்ந்து கவனித்திருக்கிறார். பின் மேடைக்கு சென்ற லோகேஷ், ஒரு மணிகண்டன் இல்லை இன்னும் 100 மணிகண்டன் வந்தாலும் சட்டையை கிழித்து சண்டைக்கு போவேன். அந்த இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறி இருந்தார். இப்படி மணிகண்டன்- லோகேஷ் இருவரும் கமலுக்காக பேசியிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இது குறித்து பலருமே மணிகண்டன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் இது குறித்து மணிகண்டன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

மணிகண்டன் கொடுத்த விளக்கம்:

அதில் அவர், நான் லோகேஷை அவமரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பேசவில்லை. நான் கமல் சாரின் மிகப்பெரிய ரசிகன். ஆனால், லோகேஷ் பல்வேறு சாதனைகளை செய்து விட்டார். அப்படிப்பட்ட பெரிய சாதனைகளை செய்துவிட்டு அவர் கமல் சார் முன் நின்று மிகப்பெரிய பேன் என்று அவரால் சொல்ல முடிந்து விட்டது. என்னால் சொல்ல முடியவில்லை. அந்த ஆதங்கத்தில் தான் நான் அப்படி பேசினேன். நான் யாரையும் அவமரியாதை செய்யும் விதமாக பேசமாட்டேன். அது கமல் சாரின் மீது இருந்த அன்பின் காரணமாகவே தவிர வேற எந்த நோக்கத்திலும் பேசவில்லை. நான் பேசி முடித்துவிட்டு லோகேஷிடம் கீழே வந்து சொன்னபோது வெயிட் பண்ணு நான் கொடுக்கும் ரிப்ளை கேட்டுவிட்டு செல் என்று சொன்னார்.

Advertisement