பர்ஸ்ட் பார்ட் தான் எனக்கு புடிச்சி இருந்துச்சி இரண்டாவது பார்ட் – Ps2 படத்தை பார்த்துவிட்டு மோகன் ஜி கொடுத்த விமர்சனம்.

0
286
- Advertisement -

பொன்னியின் செல்வன் 2 படம் எனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று இயக்குனர் மோகன் ஜி அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோலிவுட்டில் வித்தியாசமான படைப்புகளின் மூலம் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கால கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருக்கிறார் மணிரத்தினம்.

-விளம்பரம்-
ponniyin

இதனை பல பேர் முயற்சித்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்தினம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் 2:

இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக சமீபத்தில் தான் வெளியாகி இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படம் பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகிறார்கள்.

மோகன் ஜி அளித்த பேட்டி:

அதோடு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, பொன்னியின் செல்வன் படம் பார்த்துவிட்டு மோகன் ஜி அவர்கள் கூறியிருப்பது, இந்த படம் எனக்கு திருப்தி அளிக்கவில்லை.

-விளம்பரம்-

பொன்னியின் செல்வன் படம் குறித்து சொன்னது:

முதல் பாகம் தான் எனக்கு பிடித்திருந்தது. இரண்டாம் பாகத்தில் பொன்னியின் செல்வன் என படத்திற்கு பெயரை வைத்துவிட்டு அதை குறித்து எந்த ஒன்றையும் காட்டவில்லை. படம் மேக்கிங் தான் நல்லா இருக்கிறது. ஆனால், கதையில் ஒன்றுமே இல்லை என்று விமர்சித்திருந்தார். இப்படி மோகன் ஜி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

மோகன் ஜி திரைப்பயணம்:

பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். பின் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் ருத்ரதாண்டவம் படம் வெளியாகி இருந்தது. சமீபத்தில் இவர் இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பகாசூரன். இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

Advertisement