இணையத்தில் ஒரு ரவுண்டு வந்த ‘மணிகே மாகே ஹிதே’ பாடல் உருவானது இப்படித்தானாம்.

0
3944
yohani
- Advertisement -

சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சில ஆல்பம் பாடல்கள் ஜெட் வேகத்தில் வைரலாகிறது. அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பலரின் பின்னணிப் பாடலாக ’மணிகே மாகே ஹிதே’ என்ற பாடலை கேட்டிருப்பீர்கள். இந்த பாடல் சமூக உடல்களில் ஆயிரக்கணக்கான தேடல்களை கொண்டுள்ளது. இந்த பாடலுக்கு சொந்தமான பாடகி இலங்கையை சேர்ந்தவர். இவருக்கு 28 வயது தான் ஆகிறது. அவர் வேறு யாரும் இல்லை இலங்கை இசைக்கலைஞர் யோஹானி.

-விளம்பரம்-

இலங்கை மற்றும் இந்தியா இரண்டிலுமே தற்போது இந்த பாடல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாடல் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 9.2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள். இது குறித்து பிரபல நியூஸ் சேனலில் நேர்காணல் கொடுத்து உள்ளார் யோஹானி. அதில் அவர் கூறியது, டிக் டாக் வீடியோ உடன் என் பயணம் தொடங்கியது. எனது தொலைபேசியில் உள்ள ஒரு பியானோ உடன் தான் இந்த பாடல் உருவாகியது. அது நன்றாக இருந்தது.

இதையும் பாருங்க : ‘கொழந்த டா அவ’ தன் மகளை கூட கேலி செய்த பெண்ணுக்கு சாண்டி மனைவி செருப்படி பதில்.

- Advertisement -

பின்னர் இந்த பாடலின் தயாரிப்பாளர் சமத்சங்கத் என்னை அழைத்து நீங்கள் முழு பாடலையும் பாட விரும்புகிறீர்களா என்றார். பாடலை சதீஷன் ரத்நாயகா பாடியுள்ளார், டுகன் ஏஆர்எக்ஸ் வரிகளை எழுதினார். ஆனால், இந்த பாடல் இந்த அளவிற்கு பிரபலம் ஆகும் என்று நான் நினைக்கவில்லை. நாங்கள் திட்டமிட்டு இதை செய்யவில்லை. நாங்கள் பாடலை உருவாக்க மட்டும்தான் நினைத்து செய்தோம். நாங்கள் ஏதோ மனதில் தோன்றியதை பாடினோம். இசைக்கு கலாச்சாரங்களும் எல்லைகளும் கிடையாது. இசைதான் என்னுடைய வாழ்க்கை.

Manike Mage Hithe: Manike Mage Hithe

எனது அடுத்த ஆல்பத்தை கொண்டுவர விரும்புகிறேன். கோவிட் அனுமதித்தால் என்னுடைய ஆல்பத்தை நான் நேரடி நிகழ்ச்சி மற்றும் இசை சுற்றுலா பயணம் மூலம் செய்ய விரும்புகிறேன். இதுதான் என்னுடைய இலக்கு. மேலும், எனது பாடலை பல பெரிய நட்சத்திரங்கள் விரும்பியதற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்கள் கூட என்னுடைய பாடலைப் பார்த்து ட்விட் செய்துள்ளார். ஒருநாள் அவருக்கு முன்னால் நேரடியாக பாடுவேன். என்னுடைய கனவு நினைவாகும் என நம்புகிறேன் என்று கூறினார்

-விளம்பரம்-
Advertisement