விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் மற்றும் மூன்றாம் சீசன் தான். மூன்றாம் சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் சாண்டி பலராலும் அறியப்பட்ட மிகவும் பிரபலமான நபர் என்றே கூறலாம். மேலும், இந்த சீஸனின் இரண்டாம் இடத்தை பிடித்தார் பிரபல நடன இயக்குனரான சாண்டி.
இந்த சீசனில் ரன்னர் அப்பான சாண்டியை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. சாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே ரசிகர்கள்பலராலும் அறியப்பட்ட ஒரு நபராக இருந்து வந்தார். சாண்டி, விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றியதர்க்கு முன்னர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் தான் சாண்டி ரசிகர்களுக்கு பிரபலமானார்.
அதன் பின்னர் பிக் பாஸில் தன் திறமைகளை காட்டியா சாண்டி தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான ஒரு நடன இயக்குனராக திகழ்ந்து வருகிறார். பிக் பாஸின் மூன்றாவது சீசனில் சண்டிக்கு இணையாக ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது அவரது மகள் லாலா தான். சாண்டி பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவரது செல்ல மகள் லாலா உள்ளே சென்ற போது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் சாண்டி மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் சாண்டியின் மகளை உருவக் கேலி செய்தவருக்கு சாண்டி மனைவி பதிலடி கொடுத்துள்ளார். சமீபித்தல் சாண்டியின் மனைவி தன் மகளின் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
இதற்கு இன்ஸ்டா வாசி ஒருவர், குழந்தை ஏன் குண்டாக இருக்கிறது என்றும், ஒல்லியாக இருந்தால் தான் சாண்டி மாதிரி நன்றாக டான்ஸ் ஆட முடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிலளித்த சில்வியா, “இதைப் பற்றி கேள்வி கேட்டால், பாடி ஷேமிங் ஆதரவாளர்கள் இந்த நபருக்கு ஆதரவளிப்பார்கள். எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. அது ஏன்? எப்போதும் ஒரு பெண் மற்றொரு பெண்ணை பற்றி தவறாக பேசுகிறாள்? கொழந்த டா அவ, . இப்போதே சமூகத்தின் அழுத்தம் தொடங்கியது. நமது எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.