எனக்கு மட்டும் குழந்தை பிறந்தால் இதை தான் செய்வேன் – மணிமேகலை சொன்ன விஷயம். இதோ வீடியோ.

0
537
manimegalai
- Advertisement -

சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் வளர்ந்து விட்டனர். அதிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. அந்தவகையில் பிரபலமானவர் தான் விஜய் டிவி மணிமேகலை. இவர் தன்னுடைய 17 வயதில் சின்னத்திரையில் நடிக்க வந்தார். தொடக்கத்தில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமாகினார். அதன் பின்னர் பல நிகழ்ச்சிகளையும், ரியாலிட்டி ஷோகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-
Manimegalai

தொடக்க காலத்திலேயே தன்னுடை திறமையினால் தமிழ் முன்னை நடிகர்களான கமலஹாசன், விஜய் போன்றவர்களை பேட்டியெடுத்துள்ளார். தற்போது மேடைகளை கலக்கி வரும் மணிமேகலை முத்தையா காலத்தில் தன்னுடைய பேச்சு திறமையினால் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இதனால் இவருக்கு பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை நடந்த வாய்ப்புகள் கிடைத்து. மேலும் ரசிகரகளால் “ஆங்கர் சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கப்பட்ட மணிமேகலை அப்போது தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த கே.ரோசய்யாவிடம் விருதுகளை பெற்றுள்ளார்.

- Advertisement -

தொகுப்பாளினி, நடிகை, பேச்சாளர் என பல துறைகளை கலக்கிவரும் மணிமேகலை உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் செய்வதற்கு இருவரது வீட்டாரும் சம்மதிக்காத காரணத்தால் இருவரும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும் மணிமேகலை தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றால் கூட தன்னுடைய வீட்டிற்கு செல்வதில்லை. ஆனால் அவரது அம்மா மாற்றும் தம்பியுடன் பேசும் மணிமேகலை திருமணம் செய்ததிலிருந்து அவரது அப்பாவிடம் பேசியதில்லை என்று பேட்டியில் கூறியிருந்தார்.

வீடியோவில் 25 : 10 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

இந்நிலையில் 2019ஆம் ஆண்டு சன் டிவி குழுமத்தை விட்டு வெளியேறிய மணிமேகலை தற்போது விஜய் தொலைக்காட்சியும் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நடித்திருந்த குக் வித் கோமாளி ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் மணிமேக்கை 2020ஆம் ஆண்டு உஷேன் மணிமேகலை என்ற யூடுயூப் சேனலை தொடக்கி தற்போது 1.67 மில்லியன் வரை சப்கிரைபற்களை கொடுள்ளார். இதில் தன்னுடைய அன்றாட வாழ்கை, வெளிநாட்டு பயணங்கள், குக்கிங் போன்ற பல விடீயோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் பிரபல சேனல் ஒன்றும் பேட்டியளித்திருந்த தொகுப்பாளினி மணிமேகலை தனக்கு குழந்தை பிறந்தால் அது விஜய் டிவிக்குத்தான் சொந்தம் என்று கூறியுள்ளார். மணிமேகலை மற்றும் உஷேன் தம்பதிக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 6 வருடங்கள் ஆகிறது, ஆனால் இவர்களுக்கு ஒரு குழந்தைகள் கூட பிறக்கவில்லை அதற்கான காரணமும் தெரியவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தன் குழந்தையை விஜய் டிவியின் வாசலில் போடும் அளவிற்கு விஜய் டிவி மணிமேகலைக்கு என்ன செய்தது என்று அவரின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement