பிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது தனது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மணிமேகலை தனது குடும்ப சூழல் குறித்து பேசுகையில், எங்களுடைய திருமணத்துக்கு முன்னாடியே வீட்டில் புரிய வைக்க எவ்வளவோ முயற்சி எடுத்தோம். இப்போ நாங்க வீட்டுல பேச எந்த ஸ்டெப்பும் எடுக்கலை. ஏன்னா, அவங்க எதிர்பார்க்கிற நிலைமைக்கு நாங்க இன்னும் போகலை. எங்க இலக்கை அடைஞ்சிட்டு அவங்ககிட்ட நிச்சயம் பேச முயல்வோம்.
இப்போ நாங்க பேசினால், அவங்ககிட்ட நாங்க எதையாவது எதிர்பார்க்கிறோம்னு நெகட்டிவா அவங்க நினைக்க வாய்ப்பு இருக்கு. பாசமெல்லாம் இல்லாம இல்லை. பேசணுங்குற ஆசையெல்லாம் இருக்கு. நல்ல நிலைமைக்கு வந்ததும் கண்டிப்பா பேச முயற்சி செய்வோம்.முன்னாடியெல்லாம் என் ரூம்ல ஏசி ஓடினால் அதை ஆஃப் பண்ணாமலேயே கிளம்பிப் போயிடுவேன்.
இப்போ, ஒரு மணி நேரம் ஏசி ஓடிடுச்சுல ரூம் கூலிங் ஆகிட்டு போதும்னு ஏசியை ஆஃப் பண்றேன். அதே மாதிரி, முன்னாடி அவ்வளவு சாப்பாடு வேஸ்ட் பண்ணுவேன். இப்போ கொஞ்சம் கூட வேஸ்ட் பண்றதில்லை. அப்படியே சாப்பாடு மிஞ்சினா கூட இல்லாதவங்களுக்கு கொடுத்து விடுறேன். ஏதோ ஒன்றுக்காக நாம கஷ்டப்படும்போது அதோட அருமை நிச்சயம் நமக்கு புரியும்