காதல் திருமணம் செய்த மணிமேகலை ! மதம் மாறினாரா ? பெயரை மாற்றினாரா ?

0
2099

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல தொகுப்பாளினி மணிமேகலை தன் காதலன் ஹீசைனுடன் காதல் திருமணம் செய்துகொண்டார்.
வீட்டிற்கு தெரியாமல், அவர்களுக்கு விருப்பம் இல்லாததால் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மாற்று மதத்தில் காதல் திருமணம் செய்க்கொண்டதால் அவர் தனது பெயர் அம்மதத்திற்கு மாற்றிவிட்டதாகவும், இதற்காக அவர் மதம் மாறிவிட்டதாகவும் செய்திகள் வந்தது.தற்போது, அவை உண்மையல்ல என ஒரு ஆங்கில ஊடகத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, வீட்டிற்கு சம்மதம் இல்லாமல் தான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால், ஒருநாள் அவர்கள் என்னை புரிந்துகொள்வார்கள். எனக்கு என்னுடைய பெற்றோர் அழகான பெயர் வைத்துள்ளனர். நான் ஏன் எனது பெயரை மாற்ற வேண்டும். அப்படி என் கணவர் அவர் வழிபடும் இடத்திற்கு அழைத்து சென்றாள் அங்கு சேவை செய்வேன் என கூறி, அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.