பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி மகனை நடிக்க கேட்டுள்ள மணிரத்னம் – நோ சொன்ன ஜெயம் ரவி. காரணம் இது தானாம்.

0
3528
jayamravi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக தூள் கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் ரவியின் தந்தை மோகன் திரைப்பட எடிட்டர் என்பதும், மோகனின் மனைவியின் பெயர் வரலக்ஷ்மி என்பதும் தெரியும். 2003ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும் சகோதரன் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் ரவி சினிமா உலகிற்கு அறிமுகமானார். ரவி நடித்த முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

-விளம்பரம்-

இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, எங்கேயும் காதல், நிமிர்ந்து நில், ரோமியோ ஜூலியட், தனிஒருவன் என்று பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். பெரும்பாலும் இவருடைய படங்கள் எல்லாமே மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது.

- Advertisement -

மேலும், இவர் நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தின் மூலம் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டபட்டது. இந்த நிலையில் ஜெயம் ரவி நடித்து வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் இவர் நடிப்பதாக இருந்ததாம். ஆனால், ஜெயம் ரவி தான் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஜெயம் ரவி,டிக் டிக் டிக் படத்திற்கு பின்னர் நானும் என் மகனும் பொன்னியின் செல்வன் படத்தில் சேர்ந்து நடிப்பதாக இருந்தது. ஆனால், ஆரவ்விற்கு ஸ்கூல் எக்ஸாம் என்று இருந்ததால் அவரை நடிக்க வைக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் ஜெயம் ரவி. தற்போது அந்த ரோலில் யார் நடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement