PS2 : நாவலில் இல்லாததைச் சேர்த்தது ஏன், மற்றம் செய்தது ? – மணிரத்னம் சொல்வது என்ன?

0
598
Maniratnam
- Advertisement -

பொன்னியின் செல்வன் நாவலில் இல்லாத சில விஷயங்களை படத்தில் சேர்த்தது குறித்து எழுந்த சர்ச்சைக்கு இயக்குனர் மணிரத்தினம் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கால கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருக்கிறார் மணிரத்தினம்.

-விளம்பரம்-

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் 2:

இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக நேற்று வெளியாகி இருக்கிறது.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இருந்தும், படத்தில் நாவலில் இல்லாத சில விஷயங்களை சேர்த்தும், நாவலில் இருந்த சில விஷயங்களை மாற்றியும் இருப்பது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

படத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்து சொன்னது:

இந்நிலையில் இது தொடர்பாக இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், கல்கியின் கதை ஐந்து பாகங்களாக இருந்தது. அதில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தது. அதை எல்லாம் எழுத அவருக்கு நிறைய நேரமும், எண்ணமும் இருந்திருக்கிறது.ஆனால், சினிமா முற்றிலும் வேறு. இது கொஞ்ச நேரத்தில் நிறைய விஷயங்களை சொல்லணும். சும்மா பேச்சுல கதை சொல்ல முடியாது. கதையை மக்கள் கண்கூடாக பார்க்கணும். அப்போது தான் ஒரு கதையை சொல்ல முடிந்த திருப்தி வரும்.

-விளம்பரம்-

மாற்றத்திற்கான காரணம் :

இதில் பிரச்சனை எல்லாம் ஸ்கிரிப்ட் எழுதும் போது தான் வரும். அதுவும் திருப்தியாக முடிந்து விட்டால் அதை அப்படியே செயலாக்க பார்க்க வேண்டியதுதான். அப்படி நல்லபடியாக வந்திருக்கிற நாவலில் இருந்து சில மாற்றங்கள் இருக்கு. எல்லாம் சேர்ந்து கோர்வையாகி வரும்போது கதையில் சின்ன விஷயங்களை சேர்க்க வேண்டி வந்தது. சினிமாவை பொறுத்தவரை முடிவு, கிளைமாக்ஸ் என்பது வேறு. நாவலுக்கு என்ன விதமாகவும் எழுதலாம். ஆனால், சினிமாவில் கிளைமாக்ஸ் ஆக உச்சத்தில் வந்து நிற்கணும். சினிமா மொழிக்கு இது சவால் தான்.

படத்தில் சில மாற்றங்கள் இருக்கிறது :

எல்லாம் சரியாகி ஒரு வடிவத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். கல்கி நின்று நிதானமாக எழுதியதில் நல்ல தருணங்கள் எதையும் தவற தவிர விடவில்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். சில கதாபாத்திரங்கள், சில காட்சி, சில இடங்கள் என படத்தில் இல்லை தான். இதனால் கிளை கதைகளை குறைக்க வேண்டி இருந்தது. முக்கியமான கதையை கோர்வையாக சொல்ல மெனக்கட வேண்டியது. படத்தில் சில மாற்றங்கள் இருக்கிறது. ஆனால், கல்கி எழுதிய பொன்னியின் செல்வனுடைய உயிர், ஆத்மா நிச்சயம் படத்தில் இருக்கு. படத்தை பார்த்த பிறகு நீங்களும் இதையே சொல்வீர்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement