தளபதி படத்தின் முதல் ஷாட்டில் மயங்கி விழுந்த ஆயிரத்தில் ஒருவன் அழகம்பெருமாள்.

0
10470
azhagam-perumal
- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மணிரத்னம். வரலாற்று சிறப்பு மிக்க படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயங்கி வருகிறார். இயக்குனர் மணிரத்தினம் 1983ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘பல்லவி அனுபல்லவி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் 1985-ம் ஆண்டு ‘பகல் நிலவு’ என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இதயக்கோவில் மௌன ராகம் நாயகன் அக்னி நட்சத்திரம் அஞ்சலி போன்ற பல்வேறு படங்களை இயக்கினார் மணிரத்னம் ஆனால் இவர் சூப்பர் ஸ்டாரை வைத்து எடுத்த தளபதி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் ஏற்படுத்தித் தந்தது. மணி ரத்னத்திடம் பல்வேறு நபர்கள் வேலை செய்துள்ளனர். ஆனால், இவருக்கும் நடிகரும் இயக்குனருமான அழகம் பெருமாளுக்கு உள்ள 30 ஆண்டு உறவை பற்றி பெரும்பாலானோர் அறிய வாய்ப்பில்லை. அதனை பற்றி பார்த்திபன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதை கண்டு அதனை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அழகம் பெருமாள் அழகம்பெருமாள் அவர்கள் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக முதல்முதலில் சேர்ந்து பணியாற்றிய படம் தளபதி. உதவி இயக்குனராக சேர்ந்த முதல்நாளிலேயே சீன் தொடங்குவதற்காக அவரை கிளாப் அடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். கடும் வெயில், சுற்றி நின்ற கூட்டம், முதல் பணியாதலால் ஏற்பட்ட படபடப்பு எல்லாம் சேர்ந்து கொள்ள கிளாப் அடிப்பதற்கு முன்பு மயங்கி விழுந்திருக்கிறார் அழகம்பெருமாள்.

இதையும் பாருங்க : நடிகர் கருணாஸ் மகனை அசுரன்ல பார்த்திருப்பீங்க. அவரது மகளை பார்த்துளீர்களா.

- Advertisement -

இதைப்பார்த்து ஓடி வந்த மணிரத்னம் அவரை தேற்றி இயல்பு நிலைக்கு திருப்பியிருக்கிறார். பின்பு அங்கிருந்தவர்களிடம் “இவர் இன்னைக்குதான் ஜாயின் பண்ணிருக்கார்.அவர் சூட்டிங் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டாமா?கொஞ்ச நாள் ஆகணும்ல. மொதல் நாள்லயே யாரு அவரை கிளாப் அடிக்க விட்டது”என கடிந்து கொண்டாராம்.அங்கு தொடங்கியது அவர்களின் நட்பு. இன்றுவரை அது எந்தவித தொய்வுமின்றி வளர்ந்து கொண்டே இருக்கிறது. தளபதிக்கு பின் வந்த அனைத்து படங்களின் கிராமங்கள் எல்லாமே திருநெல்வேலியை மையப்படுத்தியவை.அந்த கதாபாத்திரங்கள் பேசுவதெல்லாம் சுத்தமான துளி கலப்பில்லாத திருநவேலி வட்டார வழக்கைத்தான்.

தளபதி படத்தில் ஆரம்பக்காட்சியில் மனைவி தன் கணவனுக்கு குளிப்பாட்டிக்கொண்டிருப்பாள். கதவுதட்டும் ஓசை கேட்டு” அட யாருலே அது? பண்டியல் அதுவுமா?” என்றபடி சென்று கதவை திறப்பாள். பண்டிகைக்கு இங்கே கொங்கு நாட்டில் நோம்பி என்பார்கள். அதற்க்கு தென்மாவட்டத்தில் பண்டியல். இதே போல் ரோஜா படத்திலும் ஆரம்ப கிராம காட்சிகள் திருநெல்வேலியின் ஒரு கிராமத்தை சார்ந்தவை. தனது ஆடுகளை காணாமல் தேடுபவனை அழைத்து “அம்பி அய்யர் வீட்டுச் சாம்பார்ல கொதிக்குது போயி பாருலே” என கிழவி கேலி செய்வது அம் மண்ணுக்கே உரிய ஒன்று

-விளம்பரம்-

அதற்கு அடுத்து வந்த திருடா திருடா வும் திருநெல்வேலி வட்டாரத்தை கதைக்களமாக கொண்டதுதான். பின்பு பம்பாயிலும் குரு விலும் திருநெல்வேலி மாவட்டம் என்றே படத்திலும் குறிக்கப்படும் கதை நடக்கும் ஊர்கள். அதுவும் குரு படத்தை சொல்லியே ஆகவேண்டும் அப்படத்தின் நாயகன் வானளாவ உயர்ந்த பின்னும் வட்டார வழக்கு பேசுவதை கைவிடமாட்டான். குரு படத்துக்கு தமிழில் வசனமெழுதியவர் அழகம்பெருமாள் தான். பின்பு அலைபாயுதேவில் தனது குருநாதர் மூலமாகவே திரைக்கு பின்னிலிருந்து திரைக்கு முன்பு நடிகராக அறிமுகமானார். அப்படத்தில் ஹவுஸ் ஓனர் தொடங்கி கற்றதுதமிழ்,புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், தரமணி என முத்திரை பதித்துக்கொண்டே செல்கிறார். அவர் இயக்கிய டும்டும்டும் குறிப்பிடத்தக்க திருநவேலி படங்களுள் ஒன்று.

நன்றி – பார்த்திபன்.

Advertisement