தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான மணிரத்னம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி தான் தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மணிரத்னம். வரலாற்று சிறப்பு மிக்க படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான மணிரத்னம்.

தமிழில் 1985 ஆம் ஆண்டு வெளியான ‘பகல் நிலவு ‘ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மணிரத்னம், ‘இதய கோவில்’, ‘இருவர்’, ‘மவுனராகம்’, ‘தளபதி’, ‘அலைபாயுதே’, ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘அஞ்சலி’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘நாயகன்’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார்.

இதையும் பாருங்க : கில்லி படத்தில் திரிஷாவுக்கு அம்மாவாக நடித்தது யார் தெரியுமா.! பார்த்தா ஷாக் ஆவீங்க.! 

Advertisement

இறுதியாக இவரது இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வரலாற்று சிறப்பு மிக்க படமான பொன்னியின் செலவன் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மணிரத்னம் நெஞ்சுவலி காரணமாக திடீரென சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று நேற்று இரவு செய்திகள் வெளியாகியது.

Advertisement

இந்த நிலையில் மணிரத்னத்தின் மக்கள் தொடர்பாளரை விசாரித்தபோது, மணிரத்னம் சிறு வயிற்றுக்கோளாறு (அசிடிட்டி பிரச்சனை) காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், பரிசோதனை முடிந்து அவர், உடனே வீடு திரும்பிவிட்டதாக, வீணான வதந்திகளைப் பரப்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

Advertisement

ஏற்கனவே, கடந்த 2018 ஆம் ஆண்டு 3-வது முறையாக நெஞ்சுவலியால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ராவணன் படத்தின் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கபட்டு நலம் பெற்றார். இதன் பின்னர்,  2015ம் ஆண்டில்  ஓ காதல் கண்மணி படத்தின் ரிலீசுக்கு பிறகு நெஞ்சுவலி ஏற்பட்டபோது  டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement