அங்க ஷூட்டிங் இல்ல, திரும்பி வந்துடுங்க – பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கை நிறுத்திய மணிரத்னம்.

0
1165
- Advertisement -

பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை தற்போது திரைப்படமாக எடுத்து வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இவர் வித்யாசமான கதைகளை திரை உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். இந்த படத்தில் சினிமா உலகில் முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடிக்கிறார்கள். மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலம் மற்றும் ஊட்டியில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடத்த இருப்பதாக படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். பின் திடீரென்று படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது. பொன்னியின் செல்வன் படக்குழுவினர் பொள்ளாச்சிக்கு சென்று படப்பிடிப்பிற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் பாருங்க : இது தான் என் முதல் அட்டை பட போட்டோ ஷூட் – அறிமுக நாயகி அதிதி ஷங்கர் பகிர்ந்த புகைப்படம்.

- Advertisement -

இந்நிலையில் பொள்ளாச்சிக்கு படப்பிடிப்புக்காக கிளம்ப மணிரத்தினம் திடீரென தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். ஏற்கனவே பொள்ளாச்சிக்கு சென்ற தனது படப்பிடிப்புக் குழுவினரையும் மணிரத்னம் திரும்பி வர கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. திடீரென பொள்ளாச்சி படப்பிடிப்பு ரத்தானதற்கான காரணம் என்ன என்று இன்னும் தகவல் வெளியாகவில்லை. தற்போது கார்த்திக் அவர்கள் சர்தார் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் பொள்ளாச்சியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருந்தார்.

ஆனால், மணிரத்னம் படப்பிடிப்பை ரத்து செய்ததால் கார்த்தியும் பொள்ளாச்சிக்கு செல்லவில்லை என்று தெரியவந்து உள்ளது. அதோடு பொள்ளாச்சியில் ஒரு பாடல் காட்சியை படமாக்க மணிரத்னம் திட்டமிட்டு இருந்துள்ளார் என்றும், தற்போது அந்த பாடல் காட்சி இல்லாமலேயே படத்தை வெளியிட தீர்மானித்து தான் இந்த படப்பிடிப்பு ரத்து செய்திருக்கலாம் என்றும் ஒரு சிலர் தரப்பினர் வகையில் கூறப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை. மணிரத்தினம் வாயை திறந்தால் தான் பொள்ளாச்சி படப்பிடிப்பிற்கான காரணம் தெரியவரும்.

-விளம்பரம்-
Advertisement