இது தான் என் முதல் அட்டை பட போட்டோ ஷூட் – அறிமுக நாயகி அதிதி ஷங்கர் பகிர்ந்த புகைப்படம்.

0
2723
aditi
- Advertisement -

தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மிக பெரிய பொக்கிஷம் தான்.இந்தியாவில் டாப் 5 இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் இதுவரை பல முன்னணி நடிகர்களை வைத்து 12 படங்களை இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த ஷங்கர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் கூட நடித்துள்ளார். ஜென்டில் மேன் படத்தின் மூலம் அறிமுகமான ஷங்கர் தற்போது வரை பல வெற்றிபடங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது 57 வயதாகும் ஷங்கர் ஈஸ்வரி என்ற பெண்ணை பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். ஷங்கருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர்.மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர், இளைய மகள் அதிதி ஷங்கர், மற்றும் மகன் அர்ஜித் ஷங்கர். இதில் மூத்த மகளான ஐஸ்வர்யா ஒரு மருத்துவர்.

இதையும் பாருங்க : போன இரண்டாம் நாளே சக போட்டியாளர்களை கடுப்பேற்றிய பார்வதி – கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.

- Advertisement -

டாக்டரான ஐஸ்வர்யா ஷங்கர், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் ஷங்கரின் மற்றொரு மகளான அதிதி தற்போது சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார். அதுவும் இவர் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமாக இருக்கிறார்.

சூர்யாவின் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ‘விருமன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமாக இருக்கிறார் அதிதி. சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜைகள் கூட நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் அதிதி முதன் முறையாக பிரபல அட்டை படத்தில் இடம் பெற்றுள்ளார். அதற்காக நடத்திய போட்டோ ஷூட்டின் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement