முதல்முறையாக மனம் திறந்து தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனுபவம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மனிஷா கொய்ராலா. இவர் நேபாளத்தைச் சேர்ந்தவர். இவர் நேபாள–இந்திய நடிகை ஆவார். இவர் முதன் முதலில் திரையுலகிற்கு நேபாள மொழியில் வெளிவந்த படத்தின் மூலம் அறிமுகம் ஆகி இருந்தார்.
அதற்குப் பிறகு இவர் இந்திய சினிமா உலகில் நடிக்க துவங்கினார். அதுவும் ஹிந்தியில் தான் இவரது முதல் படமான ‘சௌடாகர்’ 1991ல் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து இவர் ஹிந்தியில் பல படங்களில் நடித்து வந்தார். இவர் அதிகமாக ஹிந்தி மொழி படங்களில் தான் நடித்து உள்ளார். இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கிய “பம்பாய் ” திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தார்.
மனிஷா கொய்ராலா திரைப்பயணம்:
இவர் இந்த ஒரு படத்திலே தமிழக மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். அதன் பின் இவர் தமிழில் கமலஹாசனுடன் ‘இந்தியன்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘பாபா’, அர்ஜுனுடன் ‘முதல்வர்’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவருடைய நடிப்பிற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு என்று கூட சொல்லலாம். மேலும், இவர் 90களில் நடித்த முன்னணி நடிகைகளுக்கு பயங்கர டஃப் கொடுத்த நடிகை என்று கூட சொல்லலாம்.
மனிஷா கொய்ராலா படங்கள்:
பின் இடையில் இவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். பின் இவர் தொடர் சிகிச்சையில் இருந்தார். இதனால் இவர் நடிப்பில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். அதன் பின் பல ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘மாப்பிள்ளை’ படத்தில் மீண்டும் தமிழ் சினிமாவை எட்டிப் பார்த்தார் மனிஷா கொய்ராலா. அதன் பின் இவர் இந்தி மொழி படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
மனிஷா கொய்ராலா பேட்டி:
இருப்பினும் பெரிதாக படங்களில் இவர் நடிப்பதில்லை. தொடர் சிகிச்சைக்கு பிறகு புற்று நோயில் இருந்து மனிஷா கொய்ராலா மீண்டு வந்திருக்கிறார். தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் ஹீரமண்டி, தி டைமண்ட் பஜார் போன்ற வெப் சீரிஸில் மனிஷா கொய்ராலா நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் புற்றுநோய் அனுபவம் குறித்து கூறியது, இந்த பயணம் எனக்கு ரொம்பவே அனுபவமாக இருந்தது. எல்லோருமே உடல் ஆரோக்கியத்தின் மீது கவனமாக இருங்கள்.
புற்றுநோய் குறித்து சொன்னது:
எனக்கு உறவினர்கள், பெரிய குடும்பம் எல்லாம் இருக்கிறது. எல்லோருமே வசதியானவர்கள் தான். ஆனால், நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது என்னுடன் யாருமே இல்லை. என்னிடம் இருந்து அவர்கள் விலகி விட்டார்கள். என்னுடைய நண்பர்கள் கூட அப்போது என்னுடன் இல்லை. என்னுடன் இருந்தது என்னுடைய பெற்றோர், சகோதரர், சகோதரிகள் தான். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது எனக்கு பல விஷயங்கள் நடந்தது. நோய் பாதிப்பதற்கும் முன்பு இருந்தது போல என்னுடைய உடல் இல்லை. இப்போது என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. நான் மன அழுத்தத்தோடு தான் இருக்கிறேன். அதே வலியோடு தான் என்னுடைய வேலைகளையும் செய்கிறேன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.