உலகமே காலடியில் இருக்கிறது என்று மிதப்பில் இருந்தேன்.! கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா.!

0
1627
Manisha-koirala
- Advertisement -

பாலிவுட் நடிகையான மனிஷா கொய்ராலா இயக்குனர் மணிரத்னம் இயக்கியத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘பாம்பே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் இந்தியன், முதல்வன்,பாபா என்று ஒரு சில தமிழ் படத்தில் மட்டுமே நடித்திருந்தார். 

-விளம்பரம்-

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு சிகிச்சை பெற்று நன்கு குணமடைந்த பின்பு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். 

- Advertisement -

இந்நிலையில் தாம் புற்று நோயில் இருந்து மீண்டது குறித்து உருக்கமாக தெரிவித்துள்ளார். இது குறித்து “HEALED” என்ற பெயரில் அவர் வெளியிட்ட புத்தகத்தில், பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். 

தமது காலடியில் இந்த உலகமே இருப்பதாக  நினைப்பு இருந்ததாகவும், இடைவிடாத படப்பிடிப்புகளால் 1999ம் ஆண்டுகளில், உடலும் உள்ளமும் பலவீனமானது.
மீள்வதற்கு என்ன வழி? மதுவைத் தவிர என்று தெரிவித்துள்ள அவர், தமது முன்னாள் காதலர் எச்சரித்தும் கேட்கவில்லை, தவறான முடிவுகளை எடுத்ததாக அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். 

-விளம்பரம்-
Advertisement