மறைந்த நடிகர் மணிவண்ணன் பற்றி அவருடைய தங்கை மேகலா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா திரை உலகில் உதவி இயக்குனராக அடி எடுத்து வைத்து பின் பல வெற்றிப்படங்களை இயக்கி வெற்றி கண்டது மட்டுமில்லாமல் ஒரு நடிகராகவும் வெற்றி புகழ்பெற்றவர் மணிவண்ணன். இவர் சினிமா திரை உலகில் நடிகர், இயக்குனர் ஆக மட்டும் இல்லாமல் தமிழ் உணர்வாளர் ஆகவும் பங்காற்றி இருந்தார். இவர் தமிழில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை அவரே இயக்கியும் இருந்தார்.
மணிவண்ணனுக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சையும், முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையும் செய்து இருந்தார்கள். அதனாலேயே சில ஆண்டுகள் படம் இயக்காமலும், நடிக்காமலும் சினிமா துறையில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு ஓய்வுபெற்று இருந்தார். பின் இவர் 2013 ஆம் ஆண்டு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் மணிவண்ணனின் தங்கை மேகலா, என் வீட்டில் இருக்கும் எல்லா பொருட்களுமே என்னுடைய அண்ணன் மணிவண்ணன் வாங்கிக் கொடுத்தது தான்.
மணிவண்ணன் தங்கை மேகலா பேட்டி:
எந்த ஒரு கணக்கும் பார்க்காமல் எனக்காக எல்லாம் செய்திருந்தார். அக்கா தங்கைகளுக்காக உயிரையே கொடுக்க கூடியவர். அண்ணனுக்கு பதில் என்னுடைய உயிரை கடவுள் எடுத்திருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன். அந்தளவிற்கு அவருடைய இறப்பு எனக்கு வேதனை கொடுத்திருக்கிறது. என்னுடைய அப்பா ஜவுளி பிசினஸ் செய்திருந்தார். நாங்கள் வசதியான குடும்பம் தான். மூணு பெண்கள், ஒரு பையன். முதலில் அக்கா, இரண்டாவது மணிவண்ணன் அண்ணன், மூணாவது அக்கா, நான் தான் கடைசி. இரண்டு அக்காக்களுக்கு திருமணம் ஆன பிறகு அண்ணன் திருமணம் செய்து கொண்டார். அப்போது நான் ஸ்கூல் படித்துக் கொண்டு கொண்டிருந்தேன்.
மணிவண்ணன் குடும்பம்:
அதனாலே என்னுடைய அண்ணன் என்னை குழந்தை போல தான் பார்த்தார். அதேபோல் என்னோட அண்ணியும் அவங்களுடைய மூத்த பிள்ளையாக தான் என்னை பார்த்தார்கள். என்னுடைய திருமணத்தை மறைந்த கலைஞர் தலைமையில் தான் அண்ணன் நடத்தி வைத்திருந்தார். எங்கள் குடும்பத்திலேயே பிரம்மாண்டமாக எனக்கு தான் திருமணத்தை செய்து வைத்தார். எனக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. பலரும் கிண்டல், கேலி, விமர்சனம் செய்திருந்தார்கள். இருந்தாலுமே என்னுடைய அண்ணன் எனக்கு ஆதரவு கொடுத்தார். பின் எனக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஹாஸ்பிடலில் இருந்து என்னுடைய மகனை அழைத்து போக புது காரில் வந்தார்.
மணிவண்ணன் செய்தது:
அந்தளவிற்கு என் மீது பாசம் கொண்டவர். எனக்காக எல்லா வசதியையும் செய்து கொடுத்திருந்தார். என்னுடைய மகன்கள் என்றால் அவருக்கு உயிர். எனக்கு மட்டும் இல்லாமல் மற்ற இரண்டு அக்காக்கள் உடைய குடும்பத்திற்கும் என்னுடைய அண்ணன் நிறைய உதவி செய்திருந்தார். இதை எல்லாம் அவர் நடிகராக வந்த பிறகு செய்யவில்லை, கூலி தொழில் செய்த போது எங்களை நன்றாக பார்த்துக் கொண்டார். நான் எட்டாவது படிக்கும்போது என்னுடைய அப்பா இறந்துவிட்டார். அதற்கு பிறகு அப்பாவாக என்னுடைய அண்ணா தான் எங்களை பார்த்துக் கொண்டார். அவர் எங்களை விட்டு போனதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அண்ணன் இறந்த ரெண்டே மாசத்தில் அண்ணியும் இறந்துவிட்டார்.
அண்ணன்-அண்ணி இறப்பு:
அந்தளவிற்கு என்னுடைய அண்ணியை அண்ணன் லவ் பண்ணார். எங்க போனாலும் அண்ணியை அழைத்துக் கொண்டுதான் போவார். பயங்கரமான பாசக்காரர். ஆனா, ரெண்டு பேருமே ரொம்ப வருஷம் வாழவில்லை. அண்ணிக்கு மார்பக புற்றுநோய் வந்து இறந்துவிட்டார். எங்க அண்ணிக்காக அவர் கோடிக்கணக்கில் ஹாஸ்பிடல் செலவு செய்திருந்தார். இருந்துமே காப்பாற்ற முடியவில்லை. அண்ணியைப் பற்றி கவலைப்பட்டு அண்ணனோட உடல்நலம் பாதித்தது. அண்ணனுக்கு முதுகு தண்டுவடத்தில் பிரச்சனை இருந்தது. அது எல்லாம் சேர்ந்து தான் அவருக்கு மாரடைப்பு ஏற்படுத்தியது. அண்ணன் போன ஏக்கத்தில் இரண்டே மாசத்தில் அண்ணி இறந்துவிட்டார். எங்கள் அண்ணனுடைய இழப்பை எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இருந்தாலுமே அவர் எங்களுடன் நினைவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று நெகழ்ச்சியாக பேசியிருக்கிறார்.